அட பரவாயில்லியே.. திமுக அதிமுக ரெண்டும் ஒரே குரல் கொடுத்துருக்காங்களே!

டெல்லி: நடத்தப்பட்ட தபால் துறை தேர்வை ரத்து செய்து விட்டு தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர். தபால் துறைத் தேர்வில் தமிழ் உட்பட ஏனைய மாநில மொழிகள் இல்லாமல் நடத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினார்கள். அதிமுக சார்பில் பேசிய நவநீத கிருஷ்ணன், கிராமப்புற இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் இந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வுகள் இருந்தது.
 

டெல்லி:  நடத்தப்பட்ட தபால் துறை தேர்வை ரத்து செய்து விட்டு தமிழில் தேர்வு நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளனர்.

தபால் துறைத் தேர்வில் தமிழ் உட்பட ஏனைய மாநில மொழிகள் இல்லாமல்  நடத்தப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்கள் இந்த பிரச்சனையை எழுப்பினார்கள்.

அதிமுக சார்பில் பேசிய நவநீத கிருஷ்ணன், கிராமப்புற இடங்களுக்கு நடத்தப்பட்ட தேர்வில் இந்தி, ஆங்கில மொழியில் மட்டுமே தேர்வுகள் இருந்தது. தமிழில் இல்லாத இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றார்.

திமுக எம்.பி. திருச்சி சிவா பேசும் போது, “தமிழ் நாட்டு இளைஞர்களை போராட்டத்திற்கு தூண்டும் வகையில் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வை நடத்தியுள்ளார்கள். முன்னதாக அந்தந்த மாநில மொழிகளிலும் தேர்வு நடத்தப்பட்டது. அதை மாற்றிவிட்டு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் தேர்வு நடத்துகிறார்கள். மத்திய அரசு அனுப்பிய சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதுடன் மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும்,” என்றார்.

மாநிலங்களவைத் தலைவர் துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, உறுப்பினர்கள் எழுப்பிய இந்த விவகாரம் முக்கியமானது. மாநிலங்களவை பாஜக தலைவர் இது குறித்து ஆராய வேண்டும். சம்மந்தப்பட்ட அமைச்சரிடம் பேசுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

மீண்டும் தபால் துறை தேர்வு நடத்தப்படுமா? அது தமிழில் இருக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது!

– வணக்கம் இந்தியா

From around the web