சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்தினருடன் ரஜினி பேசினாரா? இல்லையா? சர்ச்சையாகும் விவகாரம்!!

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் பேசியதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகவோ, அவர் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தது தொடர்பாகவோ எந்த பதிவையும் வெளியிடவில்லை. ரஜினியின் பத்திரிக்கைத் தொடர்பாளர் ரியாஸ் அகமது இது குறித்து ட்விட்டரில் பதவிட்டு, தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களை டேக் செய்திருந்தார். அந்த அடிப்படையிலேயே செய்திகள் வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது. இதைத் தவிர்த்து, தனியார்
 

சாத்தான்குளம் ஜெயராஜ் குடும்பத்தினருடன் ரஜினி பேசினாரா? இல்லையா? சர்ச்சையாகும் விவகாரம்!!சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த ஜெயராஜ் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் பேசியதாக அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது.

ஆனால் ரஜினிகாந்த் தன்னுடைய ட்விட்டர் கணக்கில் சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாகவோ, அவர் தொலைபேசியில் பேசி ஆறுதல் தெரிவித்தது தொடர்பாகவோ எந்த பதிவையும் வெளியிடவில்லை.

ரஜினியின் பத்திரிக்கைத் தொடர்பாளர் ரியாஸ் அகமது இது குறித்து ட்விட்டரில் பதவிட்டு, தொலைக்காட்சி மற்றும் செய்தி நிறுவனங்களை டேக் செய்திருந்தார். அந்த அடிப்படையிலேயே செய்திகள் வெளியிடப்பட்டிருந்ததாகத் தெரிகிறது.

இதைத் தவிர்த்து, தனியார் தொலைக்காட்சி நிருபர் ஒருவர், சம்மந்தப்பட்ட குடும்பத்தினரிடம் தொடர்பு கொண்டு, ரஜினி தொலைபேசியில் பேசியதை உறுதி செய்ததாக அந்த தொலைக்காட்சியில் கூறியிருந்தார்.

சமீப காலங்களில் தமிழக நிகழ்வுகள், அரசியல் விவகாரங்கள் குறித்து ரஜினி நேரடியாக ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பது, அல்லது ட்விட்டரில் பதிவிடுவது என்றே செய்துவருகிறார். அல்லது அவருடைய பெயரில், அவருடைய லெட்டர்பேடில் அறிக்கையாவது வெளியிடப்படும்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக, ரஜினியின் செய்தித் தொடர்பாளர், அவராகவே ட்விட்டரில் பதிவிட்டது தான் பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது. இது செய்தி தொடர்பாளரின் வெறும் விளம்பரயுத்தியோ என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

ரஜினி பேசியது உண்மையாகவே இருக்கும் என்று நம்பலாம். ஆனால், இது குறித்து அவரே நேரடியாக அறிக்கை விடுவதற்கோ, ட்விட்டரில் பதிவிடுவதற்கோ என்ன தயக்கம் என்ற கேள்விகள் இயல்பாகவே எழுகிறது தானே!. அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்த பிறகு அது தானே ரஜினியின் நடைமுறையாக இருந்து வருகிறது!

ரஜினி தரப்பில் தூத்துக்குடி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி ஒருவரை அனுப்பி, அவர் மூலமாகவது தொலைபேசியில் பேசி படத்துடன் வெளியிட்டு இருக்கலாம் தானே! இந்த சம்பவம் குறித்து கருத்து தெரிவித்து அரசியல் ஆக்க விரும்பவில்லை என்றால் தொலைபேசியில் பேசியதை மட்டும் ஏன் செய்தித் தொடர்பாளர் மூலம் ஊடகங்களுக்கு தெரியப் படுத்த வேண்டும் என்ற கேள்வியும் எழுகிறதல்லவா!

A1TamilNews.com

From around the web