கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் டோணிதான்! – ஆஸி பயிற்சியாளர் புகழாரம்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த டோணிதான் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் சமனில் முடிந்தது. பின்னர் நடந்த டெஸ்ட் தொடர் 3-1, ஒருநாள்
 

கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் டோணிதான்! – ஆஸி பயிற்சியாளர் புகழாரம்மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்தியா முதன்முறையாக வென்று சாதனைப் படைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த டோணிதான் கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் என ஆஸ்திரேலியா பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் பாராட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் சமனில் முடிந்தது.

பின்னர் நடந்த டெஸ்ட் தொடர் 3-1, ஒருநாள் தொடர் 2-1 என வென்று ஆஸ்திரேலியாவை அதன் மண்ணில் முதன் முறையாக வென்று வரலாறு படைத்தது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், மூன்றிலுமே அரைசதம் அடித்து டோணி அசத்தி தொடர் நாயகன் விருதைப் பெற்றார். 7 ஆண்டுக்கு பின்னர் தொடர் நாயகன் விருதைப் பெற்ற டோணி, தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

தோனியின் சிறப்பான பேட்டிங் குறித்து பேசிய ஆஸ்திரேலியாவில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், “37 வயதில் ஒரு வீரரின் உடல் தகுதி இந்த அளவுக்கு இருப்பது அதிசயம்தான். அவரைப் போன்ற பேட்டிங், ரன் எடுக்க ஓடும் வேகம் சிலிர்க்க வைக்கின்றது.

கிரிக்கெட்டின் சூப்பர் ஸ்டார் டோணிதான்! – ஆஸி பயிற்சியாளர் புகழாரம்

அவரின் உடல் தகுதி தான் அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது. இது இந்திய அணிக்கு மட்டுமல்ல, ஆஸ்திரேலியா வீரர்களுக்கும் சிறந்த எடுத்துக்காட்டு. அவர் ஒரு கிரிக்கெட் சூப்பர் ஸ்டார், இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அவர் தான் சிறந்த வீரர்,” என புகழ்ந்துள்ளார்.

– வணக்கம் இந்தியா

From around the web