தனி ஒருவன்…. அமெரிக்காவில் ஒரே ஒரு பயணியுடன் பறந்த விமானம்!

Last week @Delta gave me my own private jet…kind of. pic.twitter.com/p14OGLw1jv — vincent peone (@vincentpeone) August 12, 2019 சால்ட் லேக் சிட்டி: அமெரிக்காவில் ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்த போதும் விமான சேவையை இயக்கியுள்ளது டெல்டா நிறுவனம். கொலோரோடா மாநிலத்தின் அஸ்பென் நகரத்திலிருந்து யூட்டா மாநிலத்தின் சால்ட் லேக் சிட்டிக்கு விமான சேவை எண் டிஎல்3652 தாங்கிய விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானிகளும், பயணிகள் சேவையாளர்களும் விமானத்தில் ஏறி
 

சால்ட் லேக் சிட்டி: அமெரிக்காவில் ஒரே ஒரு பயணி மட்டுமே இருந்த போதும் விமான சேவையை இயக்கியுள்ளது டெல்டா நிறுவனம். 

கொலோரோடா மாநிலத்தின் அஸ்பென் நகரத்திலிருந்து யூட்டா மாநிலத்தின் சால்ட் லேக் சிட்டிக்கு விமான சேவை எண் டிஎல்3652 தாங்கிய விமானம் புறப்பட தயாராக இருந்தது. விமானிகளும், பயணிகள் சேவையாளர்களும் விமானத்தில் ஏறி தயாராக இருந்தார்கள்.

விமான நிலையத்தில் பயணச்சீட்டை உறுதிபடுத்தி விமானத்திற்குள் அனுப்பும் பணிப்பெண்ணும் அறிவிப்பு செய்தார். அப்படிச் சொல்லும் போது மிஸ்டர் வின்சென்ட் பியோன், நீங்கள் மட்டுமே இந்த விமானத்தில் செல்கிறீர்கள் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, விமானத்தின் இருக்கையில் அமர்ந்து, புறப்படத் தயாராவதற்கான அறிவிப்பு வரும் வரையிலும் நடந்தவற்றை செல்போன் காமிராவில் வீடியோவாகப் படம் பிடித்து ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் வின்செண்ட் பியோன்.

விமானத்திற்குள் ஏறுவதற்கு முன்னால், இப்படி தனி ஒருவருக்காக இதற்கு முன்னர் சேவை இயக்கப்பட்டதா என்று கேட்கிறார். அதற்கு ஊழியர் ஆமாம் என்கிறார். பின்னர் படியேறுவதற்கு முன்னால், சில ஊழியர்கள் சாக்கு மூட்டையை விமானத்தில் ஏற்றுவதைப் பார்க்கிறார். 

அவர்கள், “நீங்கள் தனி ஒருவராக பயணிப்பதால், விமானத்தின் மொத்த எடையை அதிகரிக்க எடைப்பைகளை ஏற்றுகிறோம்”, என்கிறார். உள்ளே சென்றது, பணிப்பெண் வழக்கம் போல் அனைத்து அறிவிப்புகளையும் செய்கிறார்.விமானிகளுடன் கைகுலுக்குகிறார்.  வேறு யாரும் இல்லாத விமானம் முழுவதும் ஒரு கடைசி காட்சியுடன் வீடியோ முடிகிறது. வின்சென்ட் ஒரு எழுத்தாளர், இயக்குனர் மற்றும் சாகசங்களை விரும்புபவர்.

ஏன், தனி ஒருவருக்காக விமான சேவையை இயக்கினார்கள். ரத்து செய்திருக்கலாமே என்ற கேள்வி இயல்பானதே. அஸ்பென் என்பது சிறிய நகரம். சேவை மையமான சால்ட் லேக் சிட்டியிலிருந்து இங்கு வந்து விட்டு அதே விமானம் திரும்பிச் செல்வது தான் வழக்கமான ஏற்பாடு.

விமான ஊழியர்கள் சால்ட் லேக் சிட்டியிலிருந்து வந்தவர்கள். இந்த விமான சேவையை நிறுத்தினால், அடுத்த நாள் வரையிலும் அவர்கள் அஸ்பென்னில் தங்கியிருக்க வேண்டும். சால்ட் லேக் சிட்டி திரும்பிய பிறகு அதே விமானம் வேறு ஊருக்கான சேவைக்கு தேவைப்படலாம். விமானிகளும் வேறு ஊர் சேவைக்கு செல்ல வேண்டியிருக்கும். ஆக, ரத்து செய்வதால் வரும் குழப்பங்களை விட, சேவையை இயக்குவதே சரியான முடிவாக இருந்திருக்கும்.

எது எப்படியோ, சாதாரண டிக்கெட் வாங்கிய ஒரு பயணிக்கு தனியார் ஜெட் பயண அனுபவம் கிடைத்துள்ளதே, அது தான் சிறப்பு! இந்த அனுபவம் மற்றவர்களுக்கும் கிடைக்கலாம்.. அமெரிக்காவின் சிறிய நகரங்களுக்கு விமானத்தில் செல்லும் போது, இத்தகைய அனுபவத்திற்கு கொஞ்சம் எதிர்பார்ப்புடன் இருக்கலாம்!

 

From around the web