அமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்!

உலகமெங்கும் வரும் வியாழக்கிழமை ஜனவரி 9ம் தேதி வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்கா முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ப்ரீமியர் காட்சிகள், அமெரிக்க கிழக்கு நேரம் இரவு 8 மணிக்கு தொடங்குகின்றன. சினிமார்க், ஏஎம்சி, ரீகல் போன்ற அமெரிக்காவின் பிரபல திரையரங்க வளாகங்களில் தர்பார் வெளியாகிறது. தர்பார் படத்தின் ப்ரீமியர் வெளியாகும் ஒவ்வொரு
 

அமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்!லகமெங்கும் வரும் வியாழக்கிழமை ஜனவரி 9ம் தேதி வெளியாகும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் ப்ரீமியர் காட்சிகள் அமெரிக்க நேரப்படி புதன்கிழமை ஜனவரி 8ம் தேதி நடைபெற உள்ளது.

அமெரிக்கா முழுவதும் அனைத்து முக்கிய நகரங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த ப்ரீமியர் காட்சிகள், அமெரிக்க கிழக்கு நேரம் இரவு 8 மணிக்கு தொடங்குகின்றன.  சினிமார்க், ஏஎம்சி, ரீகல் போன்ற அமெரிக்காவின் பிரபல திரையரங்க வளாகங்களில் தர்பார் வெளியாகிறது. தர்பார் படத்தின் ப்ரீமியர் வெளியாகும் ஒவ்வொரு மல்டிப்ளெக்ஸிலும் சுமார் 7 முதல் 8 காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் விற்றுத் தீர்ந்த ‘தர்பார்’ ப்ரீமியர் காட்சிகள்!

அமெரிக்காவின் ப்ரீமியர் காட்சிகள் அனைத்திற்கும் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டதாக அமெரிக்காவின் முக்கியமான முன்னோடி திரைப்பட வினியோகிஸ்தர் ஒருவர் தெரிவித்தார். அமெரிக்க ரசிகர்களும் ஆரவாரத்துடன் தர்பார் படத்தைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

அமெரிக்காவில் முதன் முதலில் தென்னிந்தியப் படங்களுக்கான ப்ரீமியர் காட்சிகள் ரஜினியின் கபாலி படத்திற்குத் தான்  திரையிடப்பட்டது. வேலைநாளாக இருந்த போதிலும் காலை முதல் நள்ளிரவு வரையிலும் திரையிட்ட இடமெல்லாம் ரசிகர்கள் வெள்ளத்தில் மூழ்கிய திரையரங்களால், ஹாலிவுட் திரையரங்க நிறுவனங்களின் பார்வை தமிழ் மற்றும் இந்தியப் படங்கள் பக்கம் திரும்பியது குறிப்பிடத் தக்கது.

www.vanakamindia  எக்ஸ்ளூசிவ்

From around the web