தர்பார் திருவிழா… அமெரிக்காவிலிருந்து நேரடி ரிப்போர்ட்!

பல வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி, சில சறுக்கல்களுக்கு பிறகு ரஜினியுடன் முருகதாஸ் ஒன்றாக வெற்றி பெற்றுள்ள கதை தான் தர்பார். அதிரடி போலீஸ் கமிஷ்னராக ரஜினி, நிச்சயம் பல காலம் பேசப்படும். ரஜினிக்கான பில்டப் அதற்கு ஏற்ற கதை அமைப்பு இடையே சிறிய காமெடி, காதல் என முதல் பாதி விறுவிறுப்பு, சுறுசுறுப்பு. யோகிபாபு சில இடங்களில் சறுக்கினாலும் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார். படுவேகமான முதல்பாதி, இரண்டாம்
 

தர்பார்  திருவிழா… அமெரிக்காவிலிருந்து நேரடி ரிப்போர்ட்!பல வருடங்களுக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக ரஜினி, சில சறுக்கல்களுக்கு பிறகு ரஜினியுடன் முருகதாஸ் ஒன்றாக வெற்றி பெற்றுள்ள கதை தான் தர்பார்.

அதிரடி போலீஸ் கமிஷ்னராக ரஜினி, நிச்சயம் பல காலம் பேசப்படும். ரஜினிக்கான பில்டப் அதற்கு ஏற்ற கதை அமைப்பு இடையே சிறிய காமெடி, காதல் என முதல் பாதி விறுவிறுப்பு, சுறுசுறுப்பு. யோகிபாபு சில இடங்களில் சறுக்கினாலும் பல இடங்களில் ஸ்கோர் செய்துள்ளார். இரண்டாம் பாதியில் காணாமல் போகிறார்.

படுவேகமான முதல்பாதி, இரண்டாம் பாதியில் எமோஷனலாக விரிந்து பல இடங்களில் விசிலடிக்க வைத்து சம்பரதாயமான கிளைமேக்ஸோடு முடிகிறது. நிவேதாதாமஸ், சுனில் ஷெட்டி மனதில் நிற்கிறார்கள். மற்றபடி ரஜினிதான் நம்மை கொள்கிறார்.

சந்தோஷ் சிவனின் கேமிரா பெரிய பலம். அனிருத் பிண்ணனி, பாடல்கள் சிறப்பு. அறிமுக காட்சி, பாங்காக் ஸீக்வன்ஸ், இண்டர்வலுக்கு முன் வரும் ஸீக்வன்ஸ், கண்ணுல திமிரு பாடல் முக்கியமாக ரஜினி ஒர்க் அவுட் சீன்கள் முருகதாஸ்க்கு ஆயிரம் சல்யூட்.

ஹீரோயினிக்கு வேலையில்லை. அழுத்தமான வசனங்கள் இல்லை, பழைய கதை, பெரிய ட்விஸ்ட்கள் ஏதுமில்லாதது, யூகிக்க கூடிய க்ளைமாக்ஸ் என மைனஸ்கள் இருந்தாலும் ஒரு நிமிடம் கூட போரடிக்காத டைரக்ஷன் படத்தை உச்சத்தில் தூக்கி நிறுத்தியுள்ளது. தர்பார் – திருவிழாவேதான்!

ரஜினிக்கு 70 வயசாம்.. யாருங்க அப்படிச் சொன்னாங்க?

– சுப்பிரமணியன், யு.எஸ்.ஏ.

From around the web