சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும்! காவல் ஆணையர் அறிவிப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பாதிப்பு நிலவரம் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ குழு, ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி ஆலோசனை மேற்கொண்டார். இதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டார். மேலும் சென்னையில் பொது இடங்களில்
 

சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும்! காவல் ஆணையர் அறிவிப்பு!தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க பல்வேறு தடுப்பு முறைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வந்த போதிலும் பாதிப்பு எண்ணிக்கை  நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.

பாதிப்பு நிலவரம் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் மருத்துவ குழு, ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி  ஆலோசனை மேற்கொண்டார்.

இதன்படி தமிழகத்தில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்றும் மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் அல்லாத ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் உத்தரவிட்டார்.

மேலும் சென்னையில் பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட மக்கள் கூட விதிக்கப்பட்ட  144 தடை  உத்தரவு தொடரும் என  காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்

A1TamilNews.com

 

From around the web