ஜூலை 14 முதல்  22 வரை மறுபடியும் ஊரடங்கு! முதல்வர் முடிவு!

கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்ட பிறகும் திடீரென மறுபடியும் கர்நாடகா பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36000பேர். தலைநகர் பெங்களூருவில் தினமும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது. நாட்டில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஆமதபாத் நகரங்களின் வரிசையில் பெங்களூரு இடம் பிடித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த கர்நாடகத்தில்
 

ஜூலை 14 முதல்  22 வரை மறுபடியும் ஊரடங்கு! முதல்வர் முடிவு!கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கட்டுப்பாட்டிற்குள் வந்து விட்ட பிறகும் திடீரென மறுபடியும் கர்நாடகா பெங்களூருவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

கர்நாடகாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 36000பேர். தலைநகர் பெங்களூருவில் தினமும் பாதிப்புக்கள் அதிகரித்து வருகிறது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்பும் வேகமாக அதிகரித்து வருகிறது.

நாட்டில் அதிகமாக கொரோனா பாதிப்பு உள்ள டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, ஆமதபாத் நகரங்களின் வரிசையில் பெங்களூரு இடம் பிடித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்த கர்நாடகத்தில்  மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் ஆலோசனை மேற்க்கொண்டுள்ளார். இந்தக் கூட்டத்தில் ஜூலை14ம் தேதி இரவு 8 மணி முதல் 22ம் தேதி காலை 5 மணி வரை 7 நாட்கள்  முழு ஊரடங்கு  அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், அத்தியாவசிய சேவைகள், காய்கறி கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும் எனவும், ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ள மருத்துவ தேர்வுகள், மருத்துவ மேல்படிப்பு தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

A1TamilNews.com

From around the web