திருமணத்திற்கு மறுத்த அண்ணனைக் கொன்ற தம்பி!

சென்னை: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி காவல்துறையில் சரணடைந்துள்ளார். சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கரன், தனசேகரன் ஆகியோருக்கு திருமணம் நடைபெறாமலேயே இருந்துள்ளது. இந்நிலையில், அண்ணன் பாஸ்கரனுக்கு வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அடுத்து, திடீரென திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால், பாஸ்கரனுக்கும் அவரது தம்பி தனசேகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தனசேகரன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் கழுத்தில் குத்தினார். இதில் பலத்த
 

திருமணத்திற்கு மறுத்த அண்ணனைக் கொன்ற தம்பி!சென்னை: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த அண்ணனை கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி காவல்துறையில் சரணடைந்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த சகோதரர்கள் பாஸ்கரன், தனசேகரன் ஆகியோருக்கு திருமணம் நடைபெறாமலேயே இருந்துள்ளது. இந்நிலையில், அண்ணன் பாஸ்கரனுக்கு வரன் அமைந்து திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அடுத்து, திடீரென திருமணத்திற்கு அவர் மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், பாஸ்கரனுக்கும் அவரது தம்பி தனசேகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தனசேகரன், வீட்டிலிருந்த கத்தியை எடுத்து பாஸ்கரனின் கழுத்தில் குத்தினார்.

இதில் பலத்த காயமடைந்த பாஸ்கரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தனசேகரன் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

From around the web