கட்டிலில் உறங்கிய கணவர்.. மகளுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்!! அலறல் சத்தத்தால் அதிர்ச்சி!

வீட்டில் உறங்கும்போது எனது மனைவி, மகளே தனக்கு தீவைத்ததாக கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழக்கும முன் மரண வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் அடுத்த புதன்சந்தை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கட்டிட தொழில் செய்து வந்தார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். கந்தசாமி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரது மனைவி தனது மகளுடன் தாயார் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதனால்
 

கட்டிலில் உறங்கிய கணவர்.. மகளுடன் சேர்ந்து மனைவி செய்த காரியம்!! அலறல் சத்தத்தால் அதிர்ச்சி!வீட்டில் உறங்கும்போது எனது மனைவி, மகளே தனக்கு தீவைத்ததாக கட்டட தொழிலாளி ஒருவர் உயிரிழக்கும முன் மரண வாக்குமூலம் அளித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் அடுத்த புதன்சந்தை ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி கட்டிட தொழில் செய்து வந்தார். இவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், சாந்தி என்ற மகளும் உள்ளனர். கந்தசாமி வழக்கம்போல் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவரது மனைவி தனது மகளுடன் தாயார் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது. இதனால் அன்று வீட்டின் வெளிப்புற பகுதியில் இருக்கும் கயிற்று கட்டிலில் கந்தசாமி உறங்கியுள்ளார். இந்நிலையில், அதிகாலையில் கந்தசாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அங்கு சென்று பார்த்தபோது கந்தசாமியும், அவரது கட்டிலும் நெருப்பில் எரிந்து கொண்டிருந்தது.

உடனடியாக தீயை அணைத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர், சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பான விசாரணையில் விபத்து என்று போலீசார் உள்பட அனைத்து கிராம மக்கள் கருதிய நிலையில் தற்போது அதிர்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. பலத்த தீக்காயம் அடைந்த நிலையில் கந்தசாமி மருத்துவமனையில் தனது மரண வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

அப்போது, தன் மீது தனது மனைவியும், மகளும் பெட்ரோல் உற்றி தீவைத்ததாக அந்த வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வாக்குமூலம் அளித்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சேந்தமங்கலம் போலீசார், கந்தசாமியின் மனைவி அங்கம்மாள் மற்றும் அவரது மகள் சாந்தியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மகளுடன் சேர்ந்து கணவரை மனைவி எதற்காக கொலை செய்தார், இதன் பின்னணி என்ன? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://www.A1TamilNews.com

From around the web