சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம் அடி உதை என்றால் மக்கள் மனமும் சும்மா இருக்குமா?

காவலர்களைப் போல மக்களும் சைகோ மோடுக்குச் சென்றால் எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் எத்தனை லத்தி துப்பாக்கி இருந்தாலும் பயனின்றிப் போய்விடும். மக்கள் மதிக்கும் வரைதான் எந்தச் சட்டமும், போலீஸூம் என்று திமுக ஐடி பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் புதுகை அப்துல்லா கூறியுள்ளார். சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அப்துல்லா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கை முலம் கூறியுள்ளதாவது, “சாத்தான்குளத்தில் நடந்தது இறப்பு வரை சென்றதால் போலீஸ் அராஜகம் வெளியில் தெரிகிறது. ஆனால் தமிழகத்தின் “ஒவ்வொரு ஊரிலும்”
 

சின்னச் சின்ன தவறுகளுக்கெல்லாம் அடி உதை என்றால் மக்கள் மனமும் சும்மா இருக்குமா?காவலர்களைப் போல மக்களும் சைகோ மோடுக்குச் சென்றால் எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் எத்தனை லத்தி துப்பாக்கி இருந்தாலும் பயனின்றிப் போய்விடும். மக்கள் மதிக்கும் வரைதான் எந்தச் சட்டமும், போலீஸூம் என்று திமுக ஐடி பிரிவு மாநிலத் துணைச் செயலாளர் புதுகை அப்துல்லா கூறியுள்ளார்.

சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அப்துல்லா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள அறிக்கை முலம் கூறியுள்ளதாவது,

“சாத்தான்குளத்தில் நடந்தது இறப்பு வரை சென்றதால் போலீஸ் அராஜகம் வெளியில் தெரிகிறது. ஆனால் தமிழகத்தின் “ஒவ்வொரு ஊரிலும்” தினமும் போலிஸ் எளிய மக்களிடம் தங்கள் வீரத்தைக் காட்டுவது தொடர்கதையாத்தான் இருக்கிறது.

கடந்த மூன்று மாதங்களாக குடும்பம், உறக்கம், உணவு துறந்து வெயிலிலும் மழையிலும் பெரும்பாலும் தெருவிலேயே காலத்தை கழிக்கும் மன அழுத்தத்தில் மொத்த போலீஸூம் சைகோ மோடில் இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வேலைப்பளு அவர்களது சைக்கோதனத்திற்கு காரணமாக இருந்தாலும் ஒன்றாம் தேதியானால் வரும் குறைந்தபட்ச சம்பள உத்திரவாதம் அவர்களுக்கு இருக்கிறது!

அதே நேரத்தில் கோடிக்கணக்கான மக்கள் கூட்டம் கையில் பைசா காசுமின்றி, எதிர்காலம் குறித்த உத்திரவாதமும் இன்றி மெல்ல மெல்ல விரக்த்தியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது. அவர்களின் வயிற்றுக்கும் வாழ்க்கைக்கும் எந்த விதமான குறைந்தபட்ச உத்திரவாதமும் இல்லை.

அவர்களும் காவலர்களைப் போல சைகோ மோடுக்குச் சென்றால் எவ்வளவு அதிகாரம் இருந்தாலும் எத்தனை லத்தி துப்பாக்கி இருந்தாலும் பயனின்றிப் போய்விடும். மக்கள் மதிக்கும் வரைதான் எந்தச் சட்டமும், போலீஸூம்!!

சின்ன சின்ன தவறுகளுக்கெல்லாம் அடி உதை என்பதை காவல்துறை தொடர்கதை ஆக்கினால் அதே விரக்த்தி நிலையில் இருக்கும் மக்களின் மனமும் எப்போதும் ஒரே போல் சும்மா இருக்காது.”

சாத்தான்குளம் சம்பவத்தில், குறிப்பிட்ட நேரத்திற்கும் மேலாக கடையை திறந்து வைத்திருந்தார்கள் என்பது தான் போலீஸ் தரப்பில் குற்றச்சாட்டாக உள்ளது. அதற்காக எதற்கு இரண்டரை மணி நேர தொலைவில் உள்ள கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட்டிடம் கொண்டு சென்று ஆஜர் படுத்தினார்கள் என்பதே ஒரு முக்கிய கேள்வியாகவும் இருக்கிறது.

அதுவும் கொரோனா ஊரடங்கு காலத்தில் இவ்வளவு தூரப் பயணம் என்பது காவல்துறையினரின் நேர விரயம் என்பதைக் காட்டிலும், கொரோனா தொற்று அபாயம் உள்ளது என்பதும் குறிப்பிடத் தக்கது.

A1TamilNews.com

From around the web