சென்னையில் காதலனை கடத்திய அமெரிக்க கல்லூரி மாணவி!

சென்னை: அமெரிக்காவில் கல்லூரியில் படித்து வருபவர் 20 வயது வாசவி என்ற மாணவி. அவருக்கு சென்னை கீழ்பாக்கத்தில் வசிக்கும் நவீத் என்ற 21 வயது காதலன் இருந்துள்ளார். காதலனை சந்திக்க சென்னை வந்த வாசவி சேத்துப்பட்டில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார். சம்பவ நாளன்று, சென்னை அண்ணாநகர் பூங்கா ஒன்றில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் கையில் இருந்த ஹெல்மட்டால் வாசவியை அடித்து விட்டார் நவீத். இரவு 11 மணி
 
சென்னையில் காதலனை கடத்திய அமெரிக்க கல்லூரி மாணவி!சென்னை: அமெரிக்காவில் கல்லூரியில் படித்து வருபவர் 20 வயது வாசவி என்ற மாணவி. அவருக்கு சென்னை கீழ்பாக்கத்தில் வசிக்கும் நவீத் என்ற 21 வயது காதலன் இருந்துள்ளார். காதலனை சந்திக்க சென்னை வந்த வாசவி சேத்துப்பட்டில் ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளார்.
 
சம்பவ நாளன்று, சென்னை அண்ணாநகர் பூங்கா ஒன்றில் இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு சந்தர்ப்பத்தில் கையில் இருந்த ஹெல்மட்டால் வாசவியை அடித்து விட்டார் நவீத். 
 
  இரவு 11 மணி அளவில் அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் பைக்கில் சென்று கொண்டிருந்த நவீத்-ஐ வழிமறித்து கடத்திச் சென்றுள்ளனர். முகப்பேர், மாதவரம் என்று கூட்டிச் சென்றவர்கள் ஜாபர்கான் பேட்டை இறக்கி விட்டு தாக்கியுள்ளனர். நவீத்திடன் இருந்த செல்போனையும் எடுத்துச் சென்று விட்டனர்.
 
மயக்கமடைந்த நவீத் மறுநாள் காலையில் நினைவு தெரிந்து பின்னர் உறவினர்கள், போலீசாரிடம் தெரிவித்துள்ளார். வாக்குவாதத்தின் போது ஹெல்மெட்டால் வாசவியை தாக்கியதால், அவர் ஆள் வைத்து என்னை கடத்திச் சென்றுள்ளார் என புகார் அளித்துள்ளார்.
 
வாசவியை கைது செய்த போலீசார், அவர் அளித்துள்ள வாக்குமூலத்தின் அடிப்படையில் பாஸ்கர், சரவணன், பாட்சா என்ற மூன்று நபர்களை தேடி வருகிறார்கள்.
 

From around the web