உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் செல்லும் கவுசல்யா!

தன்னுடைய தந்தையை விடுதலை செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப் போவதாக கவுசல்யா கூறியுள்ளார். பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கரை கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது. சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா
 

உடுமலைப் பேட்டை சங்கர் கொலை வழக்கில் உச்ச நீதிமன்றம் செல்லும் கவுசல்யா!தன்னுடைய தந்தையை விடுதலை செய்த சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லப் போவதாக கவுசல்யா கூறியுள்ளார்.

பழனியைச் சேர்ந்த கவுசல்யா மாற்று ஜாதியைச் சேர்ந்த சங்கரை  கடந்த 2015ம் ஆண்டு பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் 13ம் தேதி கவுசல்யாவையும், அவரது கணவர் சங்கரையும், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் மூன்று பேர் கும்பல் சரமாரியாக வெட்டியது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டார். மற்ற 5 பேருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

“உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  நீதிமன்றத்தின் மீது நான் நம்பிக்கையை இன்னும் இழந்துவிடவில்லை. சட்டப் போராட்டத்தைத் தொடருவேன். தந்தை சின்னசாமியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வேன். உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தால் எனது தரப்பையும் வழக்கில் இணைத்துக்கொள்வேன்,” என்று கவுசல்யா கூறியுள்ளார்.

மேலும், “எனது பெற்றோர் தண்டனைக்குரியவர்கள் இல்லை என்றால் சங்கர் இன்று என்னோடு இருந்திருப்பார். இந்த வழக்கே தேவைப்பட்டிருக்காது” என்றும் தெரிவித்துள்ளார் கவுசல்யா.

தந்தைக்கு எதிரான மகளின் போராட்டம் இன்னும் தொடர்கிறது.

From around the web