தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டை கொலை! தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் போலீஸ்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அருகே உடையார்குளம் காந்திநகரில் மாமனாரும், மருமகனும் இரவில் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர். கூலித் தொழிலாளியான 60 வயது பலவேசம் என்பவர் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வைத்தியலிங்புரத்தை சேர்ந்த சண்முக சுந்தரத்திடம் 40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தி விட்டதாகவும் ஆனால் பத்திரத்தை திருப்பித் தராமலும் மேலும் பணம் கேட்டும் பலவேசத்தை சண்முக சுந்தரம் மிரட்டி வந்தாராம். தன்னுடைய மருமகன் தங்கராஜிடம் இது குறித்து கூறியுள்ளார் பலவேசம்.
 

தூத்துக்குடி மாவட்டத்தில் இரட்டை கொலை! தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடும் போலீஸ்!!தூத்துக்குடி மாவட்டத்தில் நாசரேத் அருகே உடையார்குளம் காந்திநகரில் மாமனாரும், மருமகனும் இரவில் வீடு புகுந்து வெட்டிக் கொல்லப்பட்டுள்ளனர்.

கூலித் தொழிலாளியான 60 வயது பலவேசம் என்பவர் வீட்டு பத்திரத்தை அடமானம் வைத்து வைத்தியலிங்புரத்தை சேர்ந்த சண்முக சுந்தரத்திடம்  40 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தி விட்டதாகவும் ஆனால் பத்திரத்தை திருப்பித் தராமலும் மேலும் பணம் கேட்டும் பலவேசத்தை சண்முக சுந்தரம் மிரட்டி வந்தாராம்.

தன்னுடைய மருமகன் தங்கராஜிடம் இது குறித்து கூறியுள்ளார் பலவேசம். பேட்மாநகரத்தில் வசித்து வந்த தங்கராஜ், மனைவி மற்றும் 2 வயது பெண் குழந்தையுடன் உடையார் குளம் காந்திபுரத்தில் உள்ள மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார்.

பின்னர் மாமனார் பலவேசத்தைக் கூட்டிக் கொண்டு நாசரேத் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்துள்ளார் தங்கராஜ். அந்தப் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், அதனடிப்படையில் சண்முக சுந்தரத்தை கைது செய்து தீண்டாமை, வன்கொடுமை தடுப்பு, மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சண்முக சுந்தரம் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த அவருடைய உறவினர்கள் முத்துராஜ், செல்லத்துரை, ஞான சுந்தர், பாரதி, செந்தில், முத்துகுமார் ஆகிய 6 பேர், இரவில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உடையார்குளம் காந்திநகரில் உள்ள பலவேசத்தின் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

கதவைத் திறந்து வந்த பலவேசத்துடன் வாக்குவாதம் செய்துள்ளனர். ஆத்திரம் அடைந்த முத்துராஜ் உள்ளிட்ட 6 பேரும் வீடு புகுந்து பல்வேசத்தை ஆவேசத்துடன் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது. தடுப்பதற்காக வந்த மருமகன் தங்கராஜையும் அரிவாளால் வெட்டியுள்ளனர்.

தலை, கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்த பலவேசம், தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.  முத்துராஜ் உள்ளிட்ட 6 பேரும் தப்பி ஓடிவிட்டனர். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நாசரேத் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

நெல்லை சரக டி.ஐ.ஜி பிரவீன் குமார், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் பாலகோபாலன், சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரதாபன், நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் ஆகியோர் போலீசாருடன் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். 

பலவேசம், தங்கராஜ் உடல்கள் பாளையங்கோட்டை ஹைகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்து 3 தனிப்படைகள் சப் இன்ஸ்பெக்ட்டர்கள் பாலகிருஷ்ணன், சூரியன், ரகு கணேஷ் தலைமையில் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை வலை வீசி தேடி வருகின்றனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் இந்த இரட்டைக் கொலைகள் நாசரேத் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

A1TamilNews.com

From around the web