துப்பாக்கியால் சுட்டு போலீஸ்காரர் தற்கொலை?
தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றி வந்த 24 வயது காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வேலை பார்த்து வந்த யோகேஷ்வரன் சம்பவத்தன்று இந்தியன் வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்துள்ளார். பணி நேரம் முடிந்து வங்கியின் மாடியில் உள்ள தனது அறைக்குச் சென்றவர் துப்பாக்கியால் தன்னை சுட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
பல மணி நேரங்கள் கழித்து யோகேஷ்வரன் உயிரற்ற நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டதில் ஏற்பட்ட காயம் அவரது உடலில் இருந்துள்ளது. தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ளார் என்று கருதப்படுகிறது. விசாரணை நடந்து வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்த யோகேஷ்வரன் சிவகங்கை ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.