தூத்துக்குடி மாவட்ட தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு!! சிபிசிஐடி முதல் தகவலறிக்கை!!

 
தூத்துக்குடி மாவட்ட தட்டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு!! சிபிசிஐடி முதல் தகவலறிக்கை!!

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் பகுதியில் செல்வன் என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் உட்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

திசையன்விளை காவல் நிலையம் விசாரித்து வந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றல் செய்து டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். திருமணவேல் உள்பட இருவர் சென்னை சைதாப்பேட்டையில் சரண் அடைந்திருந்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சிபிசிஐடி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. அதில், திருமணவேல், போலீஸ் இன்ஸ்பெக்ட்ர ஹரிகிருஷ்ணன் உள்பட 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

A1TamilNews

From around the web