காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்!!

 
காதல் மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவன்!!

காதலித்து திருமணம் செய்த மனைவியை கழுத்தை நெறித்து கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம்  தெற்கு ஆத்தூரில் வசித்து வந்த சரவணன், அவருடைய மனைவி ரம்யாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு இந்த வெறிச்செயலை செய்துள்ளார். திருச்செந்தூர் அருகே வள்ளிவிளையைச் சேர்ந்தவர் சரவணன். ஆழ்வார்திருநகரி மணல்குண்டு பகுதியைச் சேர்ந்த ரம்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  நாலரை வயதில் மகளும் இரண்டரை வயதில் மகனும் உள்ளனர். சென்னையில் காய்கறிக் கடை நடத்தி வந்த சரவணன், கொரோனா ஊரடங்கு காரணமாக மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளார்.

ஆத்தூர் பகுதியில் கூலி வேலைக்குச் சென்று வந்த சரவணனுக்கு குடிப்பழக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.  ஆத்திரம் அடைந்த சரவணன் மனைவியின் சேலையாலே அவருடைய கழுத்தை நெறித்துக் கொன்றுள்ளார். பின்னர் தண்ணீர் வாளியில் ரம்யாவின் தலையை அமுக்கி உள்ளார்.

குழந்தைகளின் அழுகுரலைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்த போது ரம்யா கொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரிய வந்தது. போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் விரைந்து வந்த போலீசார், ரம்யாவின் உடலை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சரவணனை கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

”எனது மனைவி ரம்யாவை பற்றி அக்கம்பக்கத்தினர் தவறாக பேசி வந்தனர். அப்பகுதியில் உள்ள வேறு ஒருவரிடம் ரம்யா பேசி பழகி வந்தார். இதனால் நான் அவளை கண்டித்தேன். ஆனால் அவள் கேட்காமல் என்னிடம் தகராறு செய்து வந்தார். சம்பவத்தன்றும் என்னிடம் தகராறு செய்தாள். இதனால் ஆத்திரம் அடைந்த நான் எனது மனைவி ரம்யாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்தேன். பின்னர் அவளை அங்குள்ள தண்ணீர் நிரப்பிய வாளியில் அமுக்கி விட்டு சென்றேன்,” என்று வாக்குமூலத்தில் சரவணன் கூறியுள்ளார்.

A1TamilNews

 

From around the web