12 வயது சிறுவன் உடலில் வெந்நீர் ஊற்றி டார்ச்சர் செய்த டாக்டர் !!

 
12 வயது சிறுவன் உடலில் வெந்நீர் ஊற்றி டார்ச்சர் செய்த டாக்டர் !!

அசாம் மாநிலத்தில் தியோரி என்ற 60 வயதான டாக்டர் வீட்டில் ஒரு 12 வயது சிறுவன் வேலை செய்து வந்துள்ளான். அந்த சிறுவன் கார் துடைப்பது, வீட்டை பெருக்குவது, சமையல் வேலைகள் செய்வது போன்ற வேலைகள் செய்து வந்தான். இந்நிலையில் அந்த சிறுவனை அந்த டாக்டரும், அவரின் மனைவியும் தினமும் அடித்தும், உதைத்தும், கட்டையால் தாக்கியும் கொடுமைப்படுத்தி வந்துள்ளார்கள்.

மேலும் கடந்த ஆகஸ்ட் மாதம்  27ம் தேதியன்று அந்த சிறுவன் நன்றாக தூங்கிக்கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த டாக்டர் தியோரி அந்த சிறுவன் மீது ‘ஏண்டா இன்னுமா காலையில் தூங்குறே”என்று கூறி அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த வெந்நீரை எடுத்து அவன் மேலே கொட்டியுள்ளார். இதன் காரணமாக அந்த சிறுவன் உடல் முழுவதும் வெந்து அலறி துடித்தான். அப்போது அந்த சிறுவனை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர்.

 அதுமட்டுமல்லாமல் அந்த சிறுவனை தினமும் கொடுமை படுத்திய டாக்டர் மீது சிறுவர்கள் மையத்தில் புகாரளிக்கப்பட்டது.
 இதனால் அந்த மையத்தை சேர்ந்த அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து அந்த டாக்டரை விசாரித்து வருகிறார்கள். 

ஆனால் அந்த டாக்டர் ஒரு புற்று நோயாளி என்பதால் அவரை கைது செய்யாமல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். இப்போது அந்த சிறுவனின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்துள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறியுள்ளார்கள்.

A1tamilnews.com

From around the web