நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? – ஸ்டாலின் ஆவேசம்!!

கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் சாத்தான்குளம் சம்பவம் ஆளுங்கட்சிக்கு மேலும் சங்கடங்களை அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் படி சாத்தான்குளத்திற்கு, நேரடியாக விசாரிக்கச் சென்ற மாஜிஸ்ட்ரேட்டிடம் அவதூறாக நடந்து கொண்டுள்ளதாக சாத்தான்குளம் காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் மீது கிரிமினல் வழக்குத் தொடர, மாஜிஸ்ட்ரேட் கொடுத்துள்ள அறிக்கையே போதுமான ஆதாரமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர். இது தொடர்பாக கருத்து
 

நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு? – ஸ்டாலின் ஆவேசம்!!கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் சாத்தான்குளம் சம்பவம் ஆளுங்கட்சிக்கு மேலும் சங்கடங்களை அதிகரித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.

மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவின் படி  சாத்தான்குளத்திற்கு, நேரடியாக விசாரிக்கச் சென்ற மாஜிஸ்ட்ரேட்டிடம் அவதூறாக நடந்து கொண்டுள்ளதாக சாத்தான்குளம் காவலர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் மற்றும் துணை கண்காணிப்பாளர் பிரதாபன் மீது கிரிமினல் வழக்குத் தொடர, மாஜிஸ்ட்ரேட் கொடுத்துள்ள அறிக்கையே போதுமான ஆதாரமாக உள்ளதாக உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ”ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலைகளைவிசாரிக்கும் நீதிபதியை போலீஸ் அதிகாரிகள் ஒருமையில் மிரட்டியிருக்கிறார்கள். இதனால் விசாரணையை திருச்செந்தூருக்கு மாற்றியிருக்கிறார் நீதிபதி!

என்ன நடக்கிறது இங்கு? நாட்டை ஆள்வது யார்? நீதிபதிக்கே மிரட்டலா? கைது செய்ய தைரியமற்றவருக்கு முதல்வர் பதவி எதற்கு?” என்று காட்டமான கேள்வியை எழுப்பியுள்ளார்.

காவல்துறை முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருப்பதால், காவல்துறையினரின் செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையும் அவருக்கு ஏற்பட்டுள்ளது. சாத்தான்குளம் சம்பவத்தில் நீதிமன்ற தலையீடு, நீதிபதிக்கு மிரட்டல், வெளியாகியுள்ள சிசிடிவி வீடியோ ஆகியவை முதலமைச்சருக்கு நெருக்கடிகளை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

A1TamilNews.com

From around the web