அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு! பொதுமக்கள் உதவியுடன் உயிர் பிழைத்தார்!!

 
அதிமுக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு! பொதுமக்கள் உதவியுடன் உயிர் பிழைத்தார்!!

சென்னையை  அடுத்த திருவேற்காடு நகர முன்னாள் தலைவரான அதிமுக பிரமுகர் மகேந்திரனை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்ற சம்பவம் பரப்பரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இரவு நேரம் மகள் வீட்டிற்குச் சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மகேந்திரனை லோடு ஆட்டோவில் வந்த மர்ம நபர்கள் இடித்து கீழே தள்ளியுள்ளனர். பின்னர் ஆட்டோவிலிருந்து இறங்கி மகேந்திரனை சரமாரியாக அரிவாளால் தாக்கியுள்ளனர். வெட்டுக்காயத்துடன் அங்கிருந்து ஓடிச் செல்ல முயன்றுள்ளார். சிறிது தூரத்தில் பொதுமக்கள் கூட்டமாக இருப்பதைப் பார்த்ததும் மர்ம நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

வெட்டுப்பட்ட மகேந்திரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் பொது மக்கள். சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமிராவில் மகேந்திரனை தாக்கி விட்டு பின்னர் தப்பி ஓடும் மர்ம ஆசாமிகளின் வீடியோ பதிவாகியுள்ளது. அதை ஆராய்ந்து வரும் திருவேற்காடு போலீசார் தேடுதல் வேட்டையைத் தொடங்கியுள்ளனர்.

A1TamilNews

From around the web