மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்.. இளம் பெண்கள் மீட்பு !

 
மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில்.. இளம் பெண்கள் மீட்பு !

சென்னை அடையாரில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்நிலையில் அடையாற எஸ்பிஐ காலனியில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை கிழக்கு தெருவை சேர்ந்த வேல்முருகன்(32) என்பவர் பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதியானது. 

மசாஜ் சென்டரில் 4 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்ததும், அங்கு வரும் நபர்களிடம் ஆசையை தூண்டும் விதமாக பேசி பாலியல் தொழில் நடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து வேல்முருகனை கைது செய்த போலீசார் அங்கிருந்து 4 இளம் பெண்கள் மீட்டனர்.

இதேபோல், அடையார் காந்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன்(27) 2 பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வீட்டை வாடகைக்கு எடுத்த வெங்கடேசன் 2 இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்துள்ளார். வெங்கடேசனை கைது 2 இளம் பெண்கள் மீட்டனர். அப்பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web