ரெக்கார்ட் நோட் எழுதாததால் மாணவரை தாக்கிய ஆசிரியர்! மருத்துவமனையில் மாணவர்!!

புதுக்கோட்டை: அரசு உதவிப்பெறும் பள்ளியில் ரெக்கார்டு நோட் எழுதவில்லை என ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செளபர் சாதிக் என்பவரது மகன் நுஜிபூர் ரகுமான், பேரன்குளத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் ரெக்கார்ட் நோட் எழுதவில்லை எனக்கூறி, வகுப்பு ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது. அதில், மாணவனின் முதுகு, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டுள்ளது. புதுக்கோட்டை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
 

ரெக்கார்ட் நோட் எழுதாததால் மாணவரை தாக்கிய ஆசிரியர்! மருத்துவமனையில் மாணவர்!!புதுக்கோட்டை:  அரசு உதவிப்பெறும்‌ பள்ளியில் ரெக்கார்டு நோட் எழுதவில்லை என ஆசிரியர் அடித்ததில் காயமடைந்த மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செளபர் சாதிக் என்பவரது மகன் நுஜிபூர் ரகுமான், பேரன்குளத்திலுள்ள அரசு‌ உதவிபெறும்‌ பள்ளியில்‌ 1‌0ஆம் வகுப்பு படித்து வருகிறார். அவர் ரெக்கார்ட் நோட் எழுதவில்லை எனக்கூறி, வகுப்பு ஆசிரியர் அடித்ததாக கூறப்படுகிறது.

அதில், மாணவனின் முதுகு, கால் பகுதிகளில் கா‌யம் ஏற்‌பட்டுள்‌ளது. புதுக்கோட்டை அரசு மருத்து‌க்கல்லூரி மருத்துவமனையில் மாணவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து மாவட்‌ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமியிடம் கேட்ட போது, சம்‌பந்தப்பட்‌ட பள்ளியில் விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

ஆசிரியர் த‌வறு செய்திருந்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

From around the web