சேலம் ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு… நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்!

சேலம்: சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினி பழனி. ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார். இவரை இன்று சிலர் கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி உள்ளனர். “நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள்தான் என்னை வெட்டினார்கள்”, என்று தலையில் வழியும் ரத்ததோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி பழனி. நடிகர் ரஜினிகாந்தை பொது மேடைகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோசமாக பேசி வருவதை பொறுக்க முடியாமல், பதிலுக்கு சமூக வலை தளங்களில் ரஜினி
 

சேலம் ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு… நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்!

சேலம்: சேலத்தைச் சேர்ந்த ரஜினி ரசிகர் ரஜினி பழனி. ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.

இவரை இன்று சிலர் கடுமையாக தாக்கி அரிவாளால் வெட்டி உள்ளனர்.

“நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள்தான் என்னை வெட்டினார்கள்”, என்று தலையில் வழியும் ரத்ததோடு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் ரஜினி பழனி.

சேலம் ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு… நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்!

நடிகர் ரஜினிகாந்தை பொது மேடைகளில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மோசமாக பேசி வருவதை பொறுக்க முடியாமல், பதிலுக்கு சமூக வலை தளங்களில் ரஜினி பழனி பதிலடி கொடுத்து வந்துள்ளார். அதை பொறுக்க முடியாமல் ரஜினி பழனியை நாம் தமிழர் கட்சியினர் தாக்கியதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல் சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும், வன்முறையை தூண்டும் சீமானை கைது செய்ய வேண்டும் என ரஜினி ரசிகர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

சேலம் ரஜினி ரசிகருக்கு அரிவாள் வெட்டு… நாம் தமிழர் கட்சியினர் மீது புகார்!

இதற்கிடையே, இந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என சேலம் நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

 

From around the web