கடையை திறந்து வைத்து கடமையை செய்ய விடாமல் போலீசாரை தடுத்தனர்! நீதிமன்றத்தில் மாவட்ட எஸ்.பி. அறிக்கை!!

சாத்தான்குளம் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் இரவில் கடையைத் திறந்து வைத்திருந்தாகவும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தேடிச் சென்ற மகன் பென்னிக்ஸ் ஐயும் சேர்த்து சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர், கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர். ஜெயராஜின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரைஉயர்நீதிமன்ற கிளையும் தாமாக முன்வந்து விசாரிக்கவும் முடிவு செய்தது. வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.
 
கடையை திறந்து வைத்து கடமையை செய்ய விடாமல் போலீசாரை தடுத்தனர்! நீதிமன்றத்தில் மாவட்ட எஸ்.பி. அறிக்கை!!சாத்தான்குளம் மார்க்கெட் பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ் இரவில் கடையைத் திறந்து வைத்திருந்தாகவும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். தேடிச் சென்ற மகன் பென்னிக்ஸ் ஐயும் சேர்த்து சாத்தான்குளம் போலீசார் கைது செய்தனர்,
 
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவர் பின் ஒருவராக இறந்துவிட்டனர். ஜெயராஜின் மனைவி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார். மதுரைஉயர்நீதிமன்ற கிளையும் தாமாக முன்வந்து விசாரிக்கவும் முடிவு செய்தது. வழக்கை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். இந்த வழக்கு அதே நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது.
 
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்கோபாலன் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் முன்பு ஆஜரானார். ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் தொடர்பான வழக்கின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை இ-மெயில் மூலமாக தாக்கல் செய்தார்.
 
“கடந்த 19-ந்தேதி போலீசார் கூறியதை மீறி கடையை திறந்து வைத்திருந்ததுடன், போலீசாரை கடமையை செய்ய விடாமல் தடுத்ததால் ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அன்று இரவு 11.30 மணியளவில் கைது செய்யப்பட்டனர்.
 
பின்னர் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. மறுநாள் 20-ந்தேதி மாஜிஸ்திரேட்டு முன்பு அவர்களை ஆஜர்படுத்தி கோவில்பட்டி சப்-ஜெயிலில் அன்று பிற்பகலில் அடைக்கப்பட்டனர். அங்கு பென்னிக்சுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். 
 
அங்கு 22-ந்தேதி இரவு 9 மணியளவில் அவர் இறந்துவிட்டார். மறுநாள் ஜெயராஜும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுதொடர்பாக கோவில்பட்டி கிழக்கு போலீசில் சிறை சூப்பிரண்டு சங்கர் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குபதிவு செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இறந்தவர்களின் உடல்கள் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் 3 டாக்டர்கள் குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது”, என்று அறிக்கையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் கோபாலன் கூறியுள்ளார். .
“சாத்தான்குளம் தந்தை-மகன் விவகாரத்தில் போலீசார் நடவடிக்கை என்பது, கொரோனாவைப்போல ஒருவிதமான நோய் ஆகும். இதை தடுக்க போலீசாருக்கு மனவள பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யலாம்” என அரசு வக்கீலிடம் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
 
பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, “இறந்தவர்களின் உறவினர்களிடம் அதிருப்தி இருந்தது. பின்னர் அமைதியான முறையில் உடல்களை பெற்று அடக்கம் செய்துள்ளனர். மனஉளைச்சலில் இருக்கும் போலீசாருக்கு தேவையான பயிற்சிகளை அளிக்க டி.ஜி.பி., சட்டசெயலாளர் அடங்கிய தலைமையிலான அதிகாரிகள் குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
 
மேலும் விரிவான உத்தரவுகளைப் பிறப்பித்த நீதிபதிகள் விசாரணையை ஜூன் 30ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
 

From around the web