சிறார் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் அடுத்த லிஸ்ட் வெளியானது!

சென்னையில் சிறார் ஆபாசப்படங்களை இணையம் மூலம் பரப்பியவர்களின் இரண்டாவது பட்டியலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு அனுப்பியுள்ளது. முதல் லிஸ்டில் 30 பேர் இடம்பெற்றிருந்த நிலையில் இரண்டாவது பட்டியலில் 40 பேர் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இதே போல் கோவையைச் சேர்ந்த 30 பேரின் பட்டியலும் அம்மாவட்ட காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி.யிடம் 2 பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது. சிறார் ஆபாசப்படங்களை பார்ப்பதில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் இருக்கும் அதிர்ச்சித் தகவல் அமெரிக்க
 

சிறார் ஆபாசப்படம் பார்ப்பவர்களின் அடுத்த லிஸ்ட் வெளியானது!

சென்னையில் சிறார் ஆபாசப்படங்களை இணையம் மூலம் பரப்பியவர்களின் இரண்டாவது பட்டியலை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப்பிரிவு அனுப்பியுள்ளது.

முதல் லிஸ்டில் 30 பேர் இடம்பெற்றிருந்த நிலையில் இரண்டாவது பட்டியலில் 40 பேர் இடம்பெற்றிருப்பதாக தெரிகிறது. இதே போல் கோவையைச் சேர்ந்த 30 பேரின் பட்டியலும் அம்மாவட்ட காவல்துறையிடம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வடக்கு மண்டல ஐ.ஜி.யிடம் 2 பேர் கொண்ட பட்டியல் தரப்பட்டுள்ளது. சிறார் ஆபாசப்படங்களை பார்ப்பதில் நாட்டிலேயே சென்னை முதலிடத்தில் இருக்கும் அதிர்ச்சித் தகவல் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. நடத்திய ஆய்வில் தெரியவந்தது.

இதனையடுத்து சிறார் ஆபாசப்படங்களை பதிவேற்றியவர்களின் பட்டியலை மத்திய அரசிடம் எஃப்.பி.ஐ. வழங்கியது. அந்த விவரங்கள் தமிழக காவல்துறைக்கு அனுப்பப்பட்டன. அதனடிப்படையில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

அதன் பயனாக திருச்சியில் கிறிஸ்டோபர் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த விவகாரத்தில் மேலும் பலர் சிக்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.A1TamilNews.com

 

 

From around the web