பெண் போலீசாருக்கு கத்திக் குத்து!
திருப்பூர் ஆயுதப்படையில் பணியாற்றி வரும் பெண் போலீசாரை அவருடைய கணவர் கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகாவை சேர்ந்த கண்ணனுக்கும், திருப்பூர் ஆயுதப்படையில் போலீசாகப் பணியாற்றும் சிவராணிக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு மகளும் உள்ளார்.
எலக்ட்ரிஷியனாக வேலை பார்த்து வரும் கண்ணனுக்கும், போலீஸ் மனைவி சிவராணிக்கும் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாதத்தில் இருவரும் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த கணவன் கண்ணன் சமையல் அறையில் உள்ள கத்தியை எடுத்து வந்து மனைவி சிவராணியின் கையில் குத்தியுள்ளார்.
காயம் அடைந்த சிவராணி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சிவராணி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜூ வழக்குப் பதிவு செய்து கண்ணனை கைது செய்துள்ளார்.