கோவை சிறுமி கூட்டு பலாத்கார வன்கொடுமை: ஒருவர் கைது

கோவை: துடியலூரைச் சேர்ந்த சிறுமி வீட்டின் அருகே கடந்த மார்ச் 26 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது. அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. சிறுமி சத்தம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரது வாயில் துணியை அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாகவும் தெரியவந்தது. அடித்துத் துன்புறுத்தி, கயிறு ஒன்றின் மூலம் கழுத்தை நெரித்தபோது, கழுத்தில் உள்ள
 

கோவை:  துடியலூரைச் சேர்ந்த சிறுமி வீட்டின் அருகே கடந்த மார்ச் 26 ஆம் தேதி சடலமாக மீட்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், சிறுமியின் உடற்கூராய்வு அறிக்கை வெளியானது. அந்த சிறுமி ஒன்றுக்கு மேற்பட்டவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. சிறுமி சத்தம் போட்டுவிடக்கூடாது என்பதற்காக, அவரது வாயில் துணியை அடைத்து வைத்து வன்கொடுமை செய்ததாகவும் தெரியவந்தது.

அடித்துத் துன்புறுத்தி, கயிறு ஒன்றின் மூலம் கழுத்தை நெரித்தபோது, கழுத்தில் உள்ள நரம்பு துண்டாகி சிறுமியின் உயிர் பிரிந்திருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சிறுமி கொலை செய்யப்படுவதற்கு முன் தொடர்ச்சியாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பதும் உடற்கூராய்வு அறிக்கையில் தெரியவந்தது.
இதனிடையே, குற்றவாளிகளை ‌பற்றிய விவரம் தெரிந்தவர்கள், தங்களிடம் தகவல் தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்தனர். அதற்காக தொலைபேசி எண்களும் அறிவிக்கப்பட்டன. துப்புக் கொடுப்பவர் பற்றிய ரகசியம் பாதுகாக்கப்படும் என்றும், அவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்றும் காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகளை அமைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தொண்டாமுத்தூரை சேர்ந்த சந்தோஷ்குமார் என்பவனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவனிடம் நடத்திய விசாரணையில் சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தில் வேறு யராவது சமந்தப்பட்டுள்ளனரா என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

From around the web