சொந்த கத்தியில் சூனியம் வைத்துக் கொண்ட இளைஞர்!

சென்னை: அயனாவரத்தில் மது மயக்கத்தில் தகராறில் ஈடுபட்ட நபர் எதிராளியை தாக்குவதற்காக இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை உருவிய போது அது அவர் வயிற்றிலேயே குத்தியதால் உயிரிழந்தார். அயனாவரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரனுக்கும் அவரது மனைவி சரிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் எனத்தெரிகிறது. அப்போதெல்லாம் சரிதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். வழக்கம் போல் மது மயக்கத்தில் மனைவியுடன் மனோகரன் சண்டை போட்டுள்ளார். மேலும் தனக்கும் சரிதாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட மாமியாரே
 

சென்னை: அயனாவரத்தில் மது மயக்கத்தில் தகராறில் ஈடுபட்ட நபர் எதிராளியை தாக்குவதற்காக இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை உருவிய போது அது அவர் வயிற்றிலேயே குத்தியதால் உயிரிழந்தார்.

அயனாவரத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி மனோகரனுக்கும் அவரது மனைவி சரிதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படும் எனத்தெரிகிறது. அப்போதெல்லாம் சரிதா தனது தாய் வீட்டுக்கு சென்றுவிடுவார். வழக்கம்  போல் மது மயக்கத்தில் மனைவியுடன் மனோகரன் சண்டை போட்டுள்ளார்.

மேலும் தனக்கும் சரிதாவுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட மாமியாரே காரணம் என்றெண்ணிய மனோகரன், அவரது வீட்டுக்குச் சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அதனை அவர்களின் உறவினர் ராகவேந்திரா என்பவர் தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

அப்போது ராகவேந்திராவை குத்துவதற்காக இடுப்பில் செருகி வைத்திருந்த கத்தியை மனோகரன் எடுத்துள்ளார். மது மயக்கத்தால் ஏற்பட்ட தள்ளாட்டத்தில் கத்தி மனோகரனின் வயிற்றில் குத்தியதுடன் அவரது ஆணுறுப்பையும் வெட்டியுள்ளது. எனினும் ராகவேந்திராவை கத்தியால் குத்திய மனோகரன் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.

தகவலறிந்து நிகழ்விடத்துச் சென்ற காவல்துறையினர் இருவரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே மனோகரன் உயிரிழந்து விட்டார்.

 

From around the web