உடல்நலக் கோளாறுகள் எதுவுமில்லை... பிரபல மாடல் அழகி தனியார் மருத்துவமனையில் வைத்து கைது

 
Rajkanya-Baruah

உடல்நலக் கோளாறுகள் இல்லை என்று டாக்டர்கள் கூறியதை அடுத்து இன்று போலீசார் தனியார் மருத்துவமனையில் வைத்து மாடல் அழகியை கைது செய்தனர்.

2016-ம் ஆண்டில் மிஸ் இந்தியா இறுதிப் போட்டியாளரும், மாடல் அழகியுமான ராஜகன்யா பாருஹா இன்று அசாம் மாநில போலீசாரால் கவுகாத்தியில்  வைத்து கைது செய்யப்பட்டார்.

கடந்த வாரம் குடிபோதையில் சொகுசு  கார் ஓட்டும் போது சாலையோர தொழிலாளர்கள் மீது மோதியதில் 8-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.  

இதை தொடர்ந்து போலீசார் அவரை செவ்வாய்க்கிழமை  போலீஸ் நிலையத்தில் ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பினர். ஆனால் அவர் உடல் நலம் சரி இல்லை என கூறி தனியார் மருத்துவமனையில் சேர்ந்ததால் ஆஜராகவில்லை.

Rajkanya-Baruah

இதையடுத்து கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் குழு  அவரை பரிசோதித்து அவருக்கு உடல்நலக் கோளாறுகள் எதுவுமில்லை என்று  கூறியதை அடுத்து இன்று பிற்பகல் போலீசார் அவரை கைது செய்தனர்.

From around the web