போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு!!

 
போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலை வழக்கு!!

கொலை வழக்கில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்வன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.  இந்தக் கொலைக்கு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் காரணம் எனக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அதிமுக பிரமுகர் திருமணவேல் உட்பட மேலும் சிலர் மீதும்  வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டத்தின் திசையன்விளை பகுதியில் தட்டார்மடம் செல்வனை அடித்து வீசிச் சென்றதால்,  நெல்லை மாவட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

A1TamilNews

From around the web