உத்தர பிரதேசத்தில் 5 குழந்தைகளுடன் கங்கையில் குதித்த பெண் – பட்டினிச்சாவு?

உத்தர பிரதேச மாநிலத்தில் 5 குழந்தைகளை கங்கையில் வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் ஒரு பெண். பதோஹி மாவட்டத்தில் உள்ள ஜஹாஜிரா காட் என்ற ஊரில் குடும்பச் செலவுகளுக்காக பணம் கேட்டு கணவனிடம் முறையிட்டுள்ளார் முன்னா என்றழைக்கப்படும் மிருதுள் என்ற பெண். கணவன் பணம் இல்லை என்று மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தியில் ஐந்து குழந்தைகளையும் கூட்டிச் சென்றவர், கங்கை நதியில் எல்லா குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார். பின்னர் தானும் கங்கையில்
 

உத்தர பிரதேசத்தில் 5 குழந்தைகளுடன் கங்கையில் குதித்த பெண் – பட்டினிச்சாவு?த்தர பிரதேச மாநிலத்தில் 5 குழந்தைகளை  கங்கையில்  வீசி விட்டு தானும் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார் ஒரு பெண்.

பதோஹி மாவட்டத்தில் உள்ள ஜஹாஜிரா காட் என்ற ஊரில் குடும்பச் செலவுகளுக்காக பணம் கேட்டு கணவனிடம் முறையிட்டுள்ளார் முன்னா என்றழைக்கப்படும் மிருதுள் என்ற பெண்.

கணவன் பணம் இல்லை என்று மறுக்கவே, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. விரக்தியில் ஐந்து குழந்தைகளையும் கூட்டிச் சென்றவர், கங்கை நதியில் எல்லா குழந்தைகளையும் தூக்கி வீசியுள்ளார். பின்னர் தானும் கங்கையில் குதித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

பின்னர் மனம் மாறி, நீந்தி கரைக்கு வந்துள்ளார் முன்னா.  அருகே வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் ஓடிச் சென்று குழந்தைகளை மீட்க முயன்றுள்ளனர். ஆனால் முடியவில்லை.

சிவசங்கர் (8 வயது) கேசவ் பிரசாத்( 3 வயது) பூஜா (எ) சரஸ்வதி (6) மற்றும் 10 வயது, 12 வயது குழந்தைகள் ஐந்து பேரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவம் குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊரடங்கு உத்தரவால், பணமும் அத்தியாவசிப் பொருட்களும் வீட்டில் இல்லாமல் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத சோகத்தால் இந்த முடிவுக்கு வந்தாரா முன்னா என்று விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web