எனது மகனும் சாத்தான்குளம் போலீசாரால் கொல்லப்பட்டார்! மதுரை உயர்நீதிமன்றத்திற்கு போன ஏழைத் தாய்!

சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் தன்னுடைய மகன் இறந்து போனதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தாய் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அவருடைய இரண்டாவது மகன் மகேந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற சாத்தான்குளம் போலீசார், தலை மற்றும் உடலில் கடுமையாக தாக்கியதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது
 

எனது மகனும் சாத்தான்குளம் போலீசாரால் கொல்லப்பட்டார்! மதுரை உயர்நீதிமன்றத்திற்கு போன ஏழைத் தாய்!சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால் தன்னுடைய மகன் இறந்து போனதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தாய் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தைச் சேர்ந்த வடிவு என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அவருடைய இரண்டாவது மகன் மகேந்திரனை விசாரணைக்காக அழைத்துச் சென்ற சாத்தான்குளம் போலீசார், தலை மற்றும் உடலில்  கடுமையாக தாக்கியதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனில்லாமல் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

தூத்துக்குடி மாவட்டம் தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டும் என்று வடிவுவின் மூத்தமகன் துரை மீது சந்தேகம் உள்ளதாக சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ், துரையை தேடி, பாப்பன்குளம் வந்துள்ளார்.  

துரை இல்லாததால், அவருடைய தம்பி மகேந்திரனை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மே மாதம் 23ம் தேதி அழைத்துச் செல்லப்பட்ட மகேந்திரனை இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் தலை மற்றும் உடல் முழுவதும் தாக்கியுள்ளதாகவும் 24ம் தேதி இரவு விடுவித்ததாகவும் வடிவு கூறியுள்ளார். இது குறித்து யாருக்கும் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார் வடிவு.

சில நாட்களுக்குப் பிறகு தூத்துக்குடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகேந்திரன், தலையில் ரத்தம் உறைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார். ஜூன் மாதம் 20ம் தேதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நடவடிக்கை எடுக்கக்கோரி மனு வழங்கியதாகவும் கூறியுள்ள வடிவு, சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்குடன், தனது மகனை தலையில் தாக்கி மரணமடைய காரணமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது.

A1TamilNews.com

From around the web