சென்னை முகப்பேரில் உலாவரும் லலிதா நகைக்கடை கொள்ளையன் முருகன்?

சென்னை: முகப்பேர் மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கிடமான காரை போலீஸார் சோதனையிட முயன்றபோது, அந்த கார், காவல்துறையினர் வாகனத்தை இடித்துத் தள்ளிவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா பார்ச்சூனர் சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுமார் 5 மணி நேரம் நின்றுள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நின்றிருந்த அந்த காரைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நொளம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் கார் கதவை
 

சென்னை முகப்பேரில் உலாவரும் லலிதா நகைக்கடை கொள்ளையன் முருகன்?சென்னை: முகப்பேர் மேற்கு பகுதியில் சந்தேகத்துக்கிடமான காரை போலீஸார் சோதனையிட முயன்றபோது, அந்த கார், காவல்துறையினர் வாகனத்தை இடித்துத் தள்ளிவிட்டுச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநில பதிவெண் கொண்ட டொயோட்டா பார்ச்சூனர் சொகுசு கார் ஒன்று சந்தேகத்திற்கிடமான முறையில் சுமார் 5 மணி நேரம் நின்றுள்ளது. ஒரே இடத்தில் நீண்ட நேரமாக நின்றிருந்த அந்த காரைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனடியாக நொளம்பூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த காவல்துறையினர் கார் கதவை தட்டி சோதனை செய்துள்ளனர்.

ஆனால் கதவை யாரும் திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் ரோந்து வாகனத்தை வைத்து காரை நகர்த்தியுள்ளனர். உடனே ரோந்துவாகனத்தை இடித்துவிட்டு, அந்த கார் நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. முகப்பேரிலிருந்து தப்பிச்சென்ற கார் வேறொரு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததை அறிந்த காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று விசாரிப்பதற்காக காரை நெருங்கியபோது மீண்டும் வேகமாக காரை இயக்கி தப்பிசென்றுள்ளனர்.

அந்த காரில் 3 பேர் இருந்ததாகவும், அந்த கார் ரவீந்திர ரெட்டி என்பவருக்கு சொந்தமானது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வாகனத்தை கொண்டுவந்தது யார்? காவலர்களைப் பார்த்ததும் தப்பி செல்வது ஏன் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்துவருகின்றனர்.

திருச்சி நகைக்கடை கொள்ளையில் தேடப்பட்டுவரும் திருவாரூர் முருகன் அப்பகுதியில் இருப்பதாக தகவல் பரவிய இந்த சம்பவம் மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

 

From around the web