சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறையில் படுகொலை! கனிமொழி எம்.பி. கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் வியாபாரிகள் போலீஸ் காவலில் மரணமடைந்த சம்பவத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது, ”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட
 

சாத்தான்குளத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறையில் படுகொலை! கனிமொழி எம்.பி. கண்டனம்தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் வியாபாரிகள் போலீஸ் காவலில் மரணமடைந்த சம்பவத்திலிருந்து இன்னும் மீள முடியாமல் இருக்கும் நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்முறை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி. கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியுள்ளதாவது,

”தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் காட்டுப்பகுதியில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் வேதனையைத் தருகிறது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்றும் தெரியவருகிறது.

இவர்கள் உச்சபட்ச தண்டனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி கொல்லப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் அதிகரித்துவரும் போதைப் பொருள் புழக்கம், பல குற்றங்களுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.

குழந்தைகளுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. இந்தக் கொடுமைகளுக்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?”

 

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப் பொருட்கள் இளைஞர்களுக்கு இலவசமாக கிடைக்கும் வகையில், போலீசாரின் துணையுடன் சிலர் செயல்பட்டு வருவதாக பரவலான குற்றச்சாட்டுகள் இருந்து வருகிறது. இளைஞர்களை போராடும் குணத்திலிருந்து மழுங்கடிப்பதற்காக டாஸ்மாக் போதையைவிடவும் கொடூரமான போதைப் பழகத்திற்கு அடிமைப் படுத்துவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

தூத்துக்குடி கனிமொழி எம்.பி இந்த விவகாரத்திலும் கவனம் செலுத்துவாரா? என்ற எதிர்பார்ப்புகளும் எழுந்துள்ளது.

 

From around the web