கடையை தீ வைத்துக் கொளுத்திய அமெரிக்க இந்தியர்கள்! இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் கைது!!

இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று திட்டமிட்டு சொந்தக் கடையை தீ வைத்துக் கொளுத்திய குற்றத்திற்காக இரண்டு அமெரிக்க இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். ஜார்ஜியா மாநிலத்தில் லேக்லேண்ட் நகரில் வசித்து வரும் 41 வயது நிலேஷ் பட்டேல் மற்றும் 34 வயது பவின்குமார் ஜோஷி ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து அவசரத் தேவைகளுக்கான அங்காடி நடத்தி வந்துள்ளனர். 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இவர்கள் நடத்தி வந்த கடையில் தீப்பிடித்து கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.
 

கடையை தீ வைத்துக் கொளுத்திய அமெரிக்க இந்தியர்கள்! இன்சூரன்ஸ் மோசடி வழக்கில் கைது!!இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும் என்று திட்டமிட்டு சொந்தக் கடையை தீ வைத்துக் கொளுத்திய குற்றத்திற்காக இரண்டு அமெரிக்க இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

ஜார்ஜியா மாநிலத்தில் லேக்லேண்ட் நகரில் வசித்து வரும் 41 வயது நிலேஷ் பட்டேல் மற்றும் 34 வயது பவின்குமார் ஜோஷி ஆகிய இருவரும் பங்குதாரர்களாக இருந்து அவசரத் தேவைகளுக்கான அங்காடி நடத்தி வந்துள்ளனர்.

2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இவர்கள் நடத்தி வந்த கடையில் தீப்பிடித்து கடை முழுவதும் எரிந்து சாம்பலானது. இழப்பீடு கோரி இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகியுள்ளனர். 

தீ விபத்து சம்பவம் குறித்து சந்தேகப்பட்ட ஜார்ஜியா மாநில இன்சூரன்ஸ், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு ஆணையர் அலுவலகம் சார்பில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர். விசாரணையின் முடிவில், இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக நிலேஷ் பட்டேலும் பவின்குமார் ஜோஷியும் திட்டமிட்டு கூட்டுசதி செய்து தங்கள் கடையை தீ வைத்துக் கொளுத்தியுள்ளதாக இன்சூரன்ஸ், பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு ஆணையர் ஜான் எஃப் கிங் கூறியுள்ளார்.

நிலேஷ் பட்டேலும் பவின்குமார் ஜோஷியும் லேனியர் கவுண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இன்சூரன்ஸ் மோசடி குற்றத்திற்கு 2 முதல் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது 10 ஆயிரம் டாலர்கள் அல்லது அபராதம் இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

A1TamilNews.com

From around the web