பாலியல் பலாத்கார வழக்கில் அமெரிக்க இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை!

பாலியல் பலாத்கார வழக்கில் 59 வயது அமெரிக்க இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் பகுதியில் உள்ள ரிச்மண்ட் ஹில்ஸ் நகரின் அபார்ட்மெண்ட் ஒன்றில் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதால் 59 வயது அசோக் சிங் க்கு 7 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. குயின்ஸ் கவுண்டி அட்டர்னி ஜெனரல் மெலின்டா கட்ஸ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது, “சம்மந்தப்பட்ட பெண் அந்தப் பகுதியில் உள்ள
 

பாலியல் பலாத்கார வழக்கில் அமெரிக்க இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறை!பாலியல் பலாத்கார வழக்கில் 59 வயது அமெரிக்க இந்தியருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் பகுதியில் உள்ள ரிச்மண்ட் ஹில்ஸ் நகரின் அபார்ட்மெண்ட் ஒன்றில் 40 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்டுள்ளதால் 59 வயது அசோக் சிங் க்கு 7 ஆண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

குயின்ஸ் கவுண்டி அட்டர்னி ஜெனரல் மெலின்டா கட்ஸ் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியுள்ளதாவது,  “சம்மந்தப்பட்ட பெண் அந்தப் பகுதியில் உள்ள இந்துக் கோவிலுக்கு சென்ற போது அங்குள்ள தகவல் அறிக்கையில் அபார்ட்மெண்ட் வாடகை குறித்த விளம்பரம் இருக்கிறதா என்று பார்த்துள்ளார்.

அதைக் கவனித்த அசோக் சிங், தான் அவருக்கு வீடு வாடகைக்குப் பார்த்துத் தர உதவுவதாக கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் தொலைபேசி எண்ணை மாற்றிக் கொண்டனர். நான்கு நாட்கள் கழித்து அசோக் சிங் அந்தப் பெண்ணுக்கு போன் செய்து, அப்பார்ட்மெண்ட் கிடைத்து விட்டது. உடனடியாக குடியேற வேண்டும் என்று கூறியுள்ளார்.

அந்தப்பெண்ணும் உடனடியாக அசோக் சிங் பார்த்த அபார்ட்மெண்டில் குடியேறி விட்டார். வெளியே சென்று உணவும், ஒயின் பாட்டிலும் வாங்கி வந்துள்ளார் அசோக் சிங். தனக்கு ஒயின் வேண்டாமென்று மறுத்துள்ளார் பெண்.  வெகுண்ட அசோக் சிங், அந்தப் பெண்ணை படுக்கையில் தள்ளி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அசோக் சிங் தூங்குவதை கவனித்த பெண், வீட்டை விட்டு வெளியேறி நண்பர் உதவியுடன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் தான் தெரியாமல் இப்படி நடந்து கொண்டேன் இனி அனுமதி இல்லாமல் இப்படி நடக்க மாட்டேன் என்று போனில் வாய்ஸ் மெசேஜ் கொடுத்துள்ளார் அசோக் சிங்.

மருத்துவ பரிசோதனையிலும் அசோக் சிங்கின் டி.என். ஏ உறுதி செய்யப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜியா மோரிஸ், அசோக் சிங்குக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை, அதன் பின்னர் 5 ஆண்டுகள் கண்காணிப்புடன் கூடிய தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.”

அமெரிக்கா போனாலும், உதவி செய்வது போல் நடித்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யும் இத்தகைய குற்றவாளிகளால், மருத்துவம் கணிணித்துறை என நன்மதிப்பு பெற்றுள்ள அமெரிக்க இந்தியர்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது.

http://www.A1TamilNews.com

 

From around the web