குடிக்க பணம் இல்லையா?.. மனைவியின் தலையை துண்டித்த முதியவர்!!

குடிக்க பணம் தர மறுத்ததால், முதியவர் ஒருவர் தனது மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் நாராயணன் – லட்சுமி என்ற வயதான தம்பதி வசித்து வந்தனர். கூலி வேலை செய்து வந்த இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் வயதான தம்பதி மட்டும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் முதியவர் நாராயணன் நேற்றிரவு
 

குடிக்க பணம் இல்லையா?.. மனைவியின் தலையை துண்டித்த முதியவர்!!குடிக்க பணம் தர மறுத்ததால், முதியவர் ஒருவர் தனது மனைவியின் தலையை துண்டித்து கொடூரமாக கொலை சம்பவம் வாழப்பாடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் நாராயணன் – லட்சுமி என்ற வயதான தம்பதி வசித்து வந்தனர். கூலி வேலை செய்து வந்த இத்தம்பதிக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருவதால் வயதான தம்பதி மட்டும் தனியாக குடும்பம் நடத்தி வந்துள்ளனர்.

இந்நிலையில் முதியவர் நாராயணன் நேற்றிரவு குடிப்பதற்கு மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். மனைவி பணம் தரமறுத்ததால் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ஆத்திரம் அடைந்த நாராயணன், அருகிலிருந்த கொடுவாளை கொண்டு தனது மனைவியின் தலையை வெட்டி துண்டித்துள்ளார். பின்னர் அவரே வாழப்பாடி காவல் நிலையத்திற்கு சென்று மனைவி கொலை குறித்து தகவலை கூறி சரணடைந்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்று, லட்சுமியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

வயதான காலத்தில் தன்னை யாரும் கண்டு கொள்வதில்லை எனவும், சரிவர வேலையும் கிடைக்காத சூழலில் குடிக்க பணம் கேட்டு தராததால் ஆத்திரமடைந்து கொடுவாளால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும் முதியவர் நாராயணசாமி வாக்குமூலம் அளித்துள்ளார்.

http://www.A1TamilNews.com

From around the web