உடுமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை!! வட மாநிலத்ததைச் சேர்ந்த கொள்ளையர்களா?

 
உடுமலையில் நள்ளிரவில் வீடு புகுந்து கொள்ளை!! வட மாநிலத்ததைச் சேர்ந்த கொள்ளையர்களா?

உடுமலைப் பேட்டை அருகே போடிப்பட்டி அண்ணா நகரில் ராஜகோபால் - லட்சுமி பிரபா தம்பதியரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த 3 கொள்ளையர்கள், இருவரையும் கட்டிப் போட்டு விட்டு நகை, பணம் என அனைத்தையும் கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர். மின் வாரியத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்றவர் ராஜகோபால். ஒரே மகன சிங்கப்பூரில் வசிக்கிறார்.

நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் அதிகாலை நாலரை மணி வரையிலும் நிதானமாக இருந்து கொள்ளை அடித்துச் சென்றுள்ளனர்.மோப்ப நாய் வரவழக்கைப்பட்டு, கொள்ளையர்களை பிடிப்பதற்காக தேடுதல் வேட்டை தொடங்கியுள்ளனர் போலீசார். ராஜகோபாலும் லட்சுமிபிரபாவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கொள்ளையர்கள் தப்பும் தவறுமாக ஆங்கிலமும் இந்தியும் கலந்து பேசியதாக ராஜகோபால் தம்பதியினர் கூறியுள்ளனர். வட மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கலாலோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

A1TamilNews.com

From around the web