தலைக்கேறிய கஞ்சா போதை! கொலை செய்த காரணத்தைக் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

 
தலைக்கேறிய கஞ்சா போதை! கொலை செய்த காரணத்தைக் கேட்டா ஷாக் ஆயிடுவீங்க!!

தமிழ்நாட்டில் கஞ்சா போதைப் பொருள் தாராளமாக கிடைப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. சில ஊர்களில் மக்களை போராட்டங்களில் ஈடுபடாமல் தடுப்பதற்காக, போதைக்கு அடிமையாக்குவதற்கு கஞ்சாவை இலவசமாகவே வழங்கியதாகவும் கூட புகார்கள் வந்தது. டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்த நிலையில் கஞ்சாவுக்கு அடிமையானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகவும் தெரிகிறது.

டாஸ்மாக் குடி போதையை விட கஞ்சா போதையில் குற்றச் செயல்கள் அதிகரித்தும் வருகிறது. சென்னையை அடுத்துள்ளா பெருங்களத்தூரில் நடைப்பயிற்சி சென்ற கிராம நிர்வாக அதிகாரியின் உதவியாளர் சங்கர் ராஜ் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சங்கர் ராஜ் பெருங்களத்தூரில் கிராம நிர்வாக அதிகாரியிடம் உதவியாளராக இருந்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முறைத்து பார்த்ததால் அவரை அடித்து கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளது. கஞ்சா மதுபோதையில் இருந்த கும்பலால், ஒருவரை அடித்தே கொன்ற சம்பவம் அந்தப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஒருத்தர் முறைச்சுப் பார்த்தார் என்ற காரணத்திற்கெல்லாம் கொலை செஞ்சா நாடு என்னாகும்? சுயபுத்தியோட இருந்தா இந்த 4 பேரும் இந்த கொடூரச் செயலை செய்து இருப்பாங்களா?

A1TamilNews.com

From around the web