மனைவியை கடத்தியுள்ளனர்! மாற்று சாதிப் பெண்ணை மணந்த கணவர் வழக்கு!!

கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வித்யா காலனி பகுதியை சேர்ந்தவர் 35 வயது கார்த்திகேயன், திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது 25 வயது மகள் தமிழினி பிரபாவை காதலித்து திருமணம் செய்துள்ளார். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கோவையில் ஜூன் மாதம் 5-ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தை தமிழினி பிரபாவின் பெற்றோர் ஏற்கவில்லை. ஆனால் கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக, பெண்ணின் பெற்றோர்
 

மனைவியை கடத்தியுள்ளனர்! மாற்று சாதிப் பெண்ணை மணந்த கணவர் வழக்கு!!கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் வித்யா காலனி பகுதியை சேர்ந்தவர் 35 வயது கார்த்திகேயன், திருச்சி சஞ்சீவி நகரை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பவரது 25 வயது மகள் தமிழினி பிரபாவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் கோவையில் ஜூன் மாதம் 5-ந் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களின் திருமணத்தை தமிழினி பிரபாவின் பெற்றோர் ஏற்கவில்லை. ஆனால் கார்த்திகேயனின் பெற்றோர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன்னதாக, பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கார்த்திகேயன் வீட்டுக்கு வந்து கார்த்திகேயன் மற்றும் அவரது தாயாரை தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை வலுக்கட்டாயமாக காரில் கடத்திச்சென்றுள்ளனர். இந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.

துடியலூர் போலீசில் கார்த்திகேயன் புகார் செய்யதுள்ளார். வழக்குப்பதிவு  செய்த போலீசார் தமிழினி பிரபாவை மீட்க திருச்சி சென்றனர். அப்போது என்னை யாரும் கடத்தவில்லை. எனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். இன்னும் 2 அல்லது 3 நாட்களில் ஊர் திரும்பி விடுவதாக தமிழினி பிரபா போலீசார் கூறியுள்ளாராம்.

இதை நம்பாமல், கார்த்திகேயன் சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் சாதி மறுப்பு திருமணம் செய்ததால் எனது மனைவி கடத்தப்பட்டு உள்ளார். அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை ஆணவ படுகொலை செய்ய வாய்ப்புள்ளது. எனவே எனது மனைவியை கண்டுபிடித்து என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என்று தெரிகிறது.

தமிழினி பிரபாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வீடு புகுந்து எனது தாயை தாக்கிவிட்டு தமிழினி பிரபாவை இழுத்துச்சென்ற வீடியோ பதிவை துடியலூர் போலீசில் ஒப்படைத்து உள்ளேன். தமிழினி பிரபாவை மிரட்டி ”என்னை கடத்தவில்லை” என்று கூற வைத்து உள்ளனர் என்று கார்த்திகேயன் கூறுகிறார்.

கார்த்திகேயனுக்கு 2010ம் ஆண்டு திருமணமாகி 2015ம் ஆண்டு விவாகரத்து ஆனதாகவும், இந்த தகவல்களை தன்னுடைய இரண்டாவது மனைவி தமிழினி பிரபாவுக்கு முன்னதாகவே தெரியப்படுத்தியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

A1TamilNews.com

 

From around the web