அதிர்ச்சி!திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் சிக்கிய துப்பாக்கி குண்டுகள், வெடிமருந்துகள் தயாரிக்கும் எந்திரம் !

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளது செங்காடு என்ற கிராமம். இப்பகுதியில் கோயில் நிலம் தொடர்பாக திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கும், ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. குமார் தரப்பினரை எம்எல்ஏ துப்பாக்கியால் சுட விவகாரம் சீரியசானது. இந்த சம்பவத்தால் திமுக எம் எல் ஏ இதயவர்மன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு
 

அதிர்ச்சி!திமுக எம்.எல்.ஏ இதயவர்மன் வீட்டில் சிக்கிய துப்பாக்கி குண்டுகள், வெடிமருந்துகள் தயாரிக்கும் எந்திரம் !தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு அதிர்ச்சி தரும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ளது செங்காடு என்ற கிராமம்.

இப்பகுதியில் கோயில் நிலம் தொடர்பாக திருப்போரூர் தொகுதி திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கும்,  ரியல் எஸ்டேட் அதிபர் இமயம் குமாருக்கும் மோதல் ஏற்பட்டது. குமார் தரப்பினரை எம்எல்ஏ துப்பாக்கியால் சுட விவகாரம் சீரியசானது. இந்த சம்பவத்தால் திமுக எம் எல் ஏ இதயவர்மன் உள்பட 19 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

எம்.எல்.ஏ.விடமிருந்து  2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவரிடம்  2 மணி நேரம் நடை பெற்ற விசாரணையில்  துப்பாக்கி, துப்பாக்கி குண்டு தயாரிக்கும் இயந்திரம், துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் மூலப்பொருட்கள் ஆகியவை அவரது வீட்டில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கி குண்டுகள் தயாரிக்கும் குப்பி, வெடிமருந்துகள், குண்டு தயாரிக்கும் இயந்திரங்கள் குறித்த விசாரணை மிகத் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இன்னும் பல அதிர்ச்சிக்கரமான தகவல்கள்  வெளியாகலாம் என காவல்துறை தெரிவித்துள்ளது.

A1TamilNews.com

From around the web