சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம்?

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை, செல்போன் கடைகள் நடத்தி வந்த தந்தையும் மகனும், விதிமுறைகளை மீறி கடையைத் திறந்துள்ளதாக காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். காவல் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவர் மீதும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தைக்கு நெஞ்சுவலி என்று கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே அவர் உயிரிழந்துள்ளார். அடுத்ததாக உடல்நலக்குறைவு என்று மகனும் அரசு
 

சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்ட வியாபாரிகள் கோவில்பட்டி கிளைச் சிறையில் மரணம்?தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை, செல்போன் கடைகள் நடத்தி வந்த தந்தையும் மகனும், விதிமுறைகளை மீறி கடையைத் திறந்துள்ளதாக காவல்நிலையத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

காவல் நிலையத்தில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் இருவர் மீதும் காவல்துறையினரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவரையும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், தந்தைக்கு நெஞ்சுவலி என்று கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கே அவர் உயிரிழந்துள்ளார். அடுத்ததாக உடல்நலக்குறைவு என்று மகனும் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரும் உயிரிழந்துள்ளார்.

போலீஸ் காவலில் உயிரிழந்துள்ள வியாபாரிகளின் மரணத்திற்கு நீதி விசாரணை வேண்டும் என்று கோரிக்கையுடன் தமிழ்நாடு வணிகர் பேரவை இன்று கடையடைப்பு அழைப்பு விடுத்துளனர். ஒரு கோடி ரூபாய் இழப்பீடும் கோரப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்.பி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இந்த மரணம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. சம்மந்தப்பட்ட காவல் துணை ஆய்வாளர்களை சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். 

தந்தை, மகன் இருவருடைய உடலும் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மூன்று மருத்துவர்கள் அடங்கிய குழு உடற்கூறு ஆய்வு செய்ய உள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் ஒரு பெரும் சந்தேகம் எழும்பியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள சாத்தான்குளத்தில் கைது செய்யப்பட்டவர்கள், அருகே உள்ள திருச்செந்தூர் கிளைச் சிறையிலோ, தூத்துக்குடி கிளைச்சிறையிலோ அடைக்கப்படாமல் 2 மணி நேர பயண நேரத்திற்கும் அதிகமான தூரத்தில் உள்ள மாவட்டத்தின் வடக்குப் பகுதியில் உள்ள கோவில்பட்டி மாஜிஸ்ட்ரேட்டிடம் அழைத்துச் செல்ல வேண்டிய அவசியம் என்ன? கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.

உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவு செய்துள்ள வழக்கில் பாதிக்கப்பட்டோருக்கு நீதியும், சம்மந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனையும் கிடைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

A1TamilNews.com

From around the web