சொத்துத் தகராறில் தம்பியை சுட்டுக் கொன்ற விஜய் ரசிகர் மன்றத் தலைவர்!

தூத்துக்குடி: விஜய் ரசிகர் மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ள பில்லா ஜெகன் சொந்தத் தம்பியைச் சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவு ஆகி உள்ளார். பில்லா ஜெகனுக்கும், அவருடைய தம்பி சிமன்சனுக்கும் வீட்டு சொத்தைப் பிரித்துக் கொள்வது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் இவர்களுக்கு இடையே மீண்டும் சொத்து தகராறு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் தம்பி என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார்
 

தூத்துக்குடி: விஜய் ரசிகர் மன்ற தூத்துக்குடி மாவட்ட தலைவராகவும், தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராகவும் உள்ள பில்லா ஜெகன் சொந்தத் தம்பியைச் சுட்டுக் கொன்று விட்டு தலைமறைவு ஆகி உள்ளார்.

பில்லா ஜெகனுக்கும், அவருடைய தம்பி சிமன்சனுக்கும் வீட்டு சொத்தைப் பிரித்துக் கொள்வது சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நள்ளிரவில் இவர்களுக்கு இடையே மீண்டும் சொத்து தகராறு குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பில்லா ஜெகன் தம்பி என்றும் பாராமல் துப்பாக்கியால் சுட்டுள்ளார்

இதில் சிமன்சனின் தொடைப் பகுதியில் குண்டு பாய்ந்து, ரத்தப் போக்கின் காரணமாக மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, நகர காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தப்பியோடிய பில்லா ஜெகனை பிடிக்க போலீஸ்படை விரைந்துள்ளது.

விஜய் ரசிகர்கள் மத்தியிலும், திமுகவினர் மத்தியிலும் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

From around the web