டெல்லி அமெரிக்க தூதரகத்தில் 5 வயது சிறுமி மீது பாலியல் பலாத்காரம்…

டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க தூதரக வளாகத்தில் வேலை பார்த்து வந்த தம்பதி தங்கள் 5 வயது மகளுடன் அங்கேயே உள்ள குடியிருப்பில் தங்கி இருந்துள்ளார்கள். சம்பவதன்று 25 வயது வாலிபர் ஒருவர், அவர்களுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தாயாருக்கு தெரியவந்ததும் போலீஸில் புகார் செய்துள்ளார். சாணக்கியபுரி போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. விசாரணை நடத்திய போலீசார் 25
 

டெல்லி அமெரிக்க தூதரகத்தில் 5 வயது சிறுமி மீது  பாலியல் பலாத்காரம்…டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரக வளாகத்தில் 5 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். 

அமெரிக்க தூதரக வளாகத்தில் வேலை பார்த்து வந்த தம்பதி தங்கள் 5 வயது மகளுடன் அங்கேயே உள்ள குடியிருப்பில் தங்கி இருந்துள்ளார்கள். சம்பவதன்று 25 வயது வாலிபர் ஒருவர், அவர்களுடைய மகளை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சிறுமியின் தாயாருக்கு தெரியவந்ததும் போலீஸில் புகார் செய்துள்ளார். சாணக்கியபுரி போலீஸ் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.  விசாரணை நடத்திய போலீசார் 25 வயது வாலிபரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக உதவி ஆணையர் ப்ராக்யா கூறியுள்ளார்.

http://A1TamilNews.com

From around the web