நடிகர் வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு: அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகர் வரதராஜன் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளின் பெட்களும் நிரம்பி விட்டன என்று சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார். நடிகர் வரதராஜனின் இந்த கருத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தவறானத் தகவலைப் பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் எச்சரிக்கை
 

நடிகர் வரதராஜன் மீது 4 பிரிவுகளில் வழக்கு: அதிர்ச்சி தகவல்மிழகத்தில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மிகத் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் நடிகர் வரதராஜன் கொரோனா பாதிப்பு சென்னையில் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளின் பெட்களும் நிரம்பி விட்டன என்று சர்ச்சையான கருத்தை வெளியிட்டிருந்தார்.

நடிகர் வரதராஜனின் இந்த கருத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வன்மையாகக் கண்டித்துள்ளார். தவறானத் தகவலைப் பரப்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் சென்னையிலும் தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் பெட்கள் அதிக அளவில் காலியாக இருக்கின்றன எனவும் விளக்கம் அளித்துள்ளார்.

இதற்குப் பிறகு வரதராஜன் ஆதாரமற்ற தகவலைத் தெரிவித்ததற்கு மன்னிப்பு கோரியும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் அடுத்தகட்ட வீடியோவை வெளியிட்டிருந்தார்.

வரதராஜனின் இந்த விளக்கத்திற்குப் பிறகும் விரோத உணர்வை தூண்டுதல், தொற்றுநோய் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல் ஆகிய நான்கு பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

A1TamilNews.com

From around the web