எழும்பூர் ரயில் நிலையம், விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும்!! மோப்ப நாயுடன் தீவிர சோதனை!!

சென்னையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100-க்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்தார். இதனைத்தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் தீவிர சோதனை செய்தனர். ரயில்வே டி.எஸ்.பி எட்வர்டு தலைமையில் சுமார் 25 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
 

எழும்பூர் ரயில் நிலையம், விமான நிலையத்தில் குண்டு வெடிக்கும்!! மோப்ப நாயுடன் தீவிர சோதனை!!சென்னையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு 100-க்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் சென்னை எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு போனை துண்டித்தார்.

இதனைத்தொடர்ந்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் எழும்பூர் ரயில் நிலையம், சென்னை விமான நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகியவற்றில் தீவிர சோதனை செய்தனர்.

ரயில்வே டி.எஸ்.பி எட்வர்டு தலைமையில் சுமார் 25 போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். எழும்பூர் ரயில் நிலையத்துக்கு மோப்ப நாய் ரோஜா மற்றும் டைசன் வரவழைக்கப்பட்டு பாம்ப் டிடெக்டர் உதவியுடன் சோதனை நடைபெற்றது. இதேபோல் சென்னை விமான நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் போலீசார் பலத்த சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் முடிவில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக கூறியது வெறும் புரளி என தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தொடர்பு கொண்ட நபர் குறித்து விசாரணை நடத்தினர். காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்த தொலைப்பேசி எண் குறித்து விசாரணை நடத்தினர், அப்போது அது திருப்போரூரைச் சேர்ந்த ஐயப்பன் என்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து செங்கல்பட்டு போலீசார் ஐயப்பனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

http://www.A1TamilNews.com

From around the web