சென்னையில்100க்கும் மேற்பட்ட பைக் திருட்டு.. 3 பேர் கைது!

சென்னை மாநகரின் பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் பைக்குகள் காணாமல் போவதாக புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்தது. இதையடுத்து உதவி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது. சிசிவிடி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர். அதில் 3 பேர் கூட்டாக இந்த திருட்டு வேலையை செய்து வருவது தெரிந்தது. இந்த பைக் திருடர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க காவல்துறையினர் வியூகம் அமைத்தனர். டவுட்டன் பாலத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை திருடுவதற்கு முயன்ற
 

சென்னையில்100க்கும் மேற்பட்ட பைக் திருட்டு.. 3 பேர் கைது!சென்னை மாநகரின் பெரம்பூர், வேப்பேரி, புரசைவாக்கம் பகுதிகளில் பைக்குகள் காணாமல் போவதாக புகார்கள் காவல் நிலையத்தில் குவிந்தது. இதையடுத்து உதவி ஆணையர் மகேஸ்வரி தலைமையில் குழு அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தொடங்கியது. சிசிவிடி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

அதில் 3 பேர் கூட்டாக இந்த திருட்டு வேலையை செய்து வருவது தெரிந்தது. இந்த பைக் திருடர்களை சுற்றி வளைத்துப் பிடிக்க காவல்துறையினர் வியூகம் அமைத்தனர். டவுட்டன் பாலத்திற்கு கீழே நிறுத்தப்பட்டிருந்த பைக்குகளை திருடுவதற்கு முயன்ற போது பைக் திருடர்கள் மூவரையும் அலேக்காக அள்ளினார்கள் காவல்துறையினர்.

விசாரணையில் அவர்கள், திருமழிசையைச் சேர்ந்த தமிழ்வாணன், அம்பத்தூரைச் சேர்ந்த சாமுவேல் மற்றும் கள்ளிக் குப்பம் பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்பது தெரிய வந்தது. மூவரும் சேர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக நூற்றுக்கும் மேற்பட்ட பைக்குகளைத் திருடி அதன் பாகங்களை தனித்தனியாக பிரித்து விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது.

அவர்களிடமிருந்து 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை வேப்பேரி காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

http://A1TamilNews.com

From around the web