அடேங்கப்பா சைபர் மோசடி ! தேசிய தேர்வு ஆணைய சர்வரிலேயே மார்க்குகளை திருத்திய பலே ஆசாமிகள்!

 
அடேங்கப்பா சைபர் மோசடி ! தேசிய தேர்வு ஆணைய சர்வரிலேயே மார்க்குகளை திருத்திய பலே ஆசாமிகள்!

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்து விட்டு திரும்பியவர்கள், இந்தியாவில் மருத்துவராக பணியாற்றுவதற்கான தேர்ச்சி தேர்வில் மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பு முடித்தவர்கள், இந்தியாவில் மருத்துவராக அங்கீகாரம் பெறுவதற்கு தேசிய தேர்வு ஆணையம் தேர்வுகள் நடத்துகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே மருத்துவராக பணியாற்ற அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தேர்ச்சி தேர்வில் தோல்வியுற்ற 10 பேர், தேர்வு ஆணைய சர்வரை ஹேக் செய்து தங்கள் மதிப்பெண்களை மாற்றி தேர்ச்சி பெற்றதாக ஆக்கியுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் தேர்வு எழுதிய பத்து பேர் இந்த மோசடியில் சிக்கியுள்ளனர். அவர்கள் அனைவரும் மீண்டும் ஜூலை மாதத் தேர்வுக்கு கட்டணம் செலுத்தியுள்ளனர். 6 பேர் ஜுலை மாதத் தேர்வும் எழுதியுள்ளனர். இந்நிலையில் இவர்கள் செய்த மோசடி அம்பலமாகியுள்ளது. அடுத்த தேர்வுகளில் எழுதுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன், மாநில மருத்துவ கவுன்சில் தேர்வுகளிலும் பங்கேற்க தடை விதிக்க பரிந்துரைக்கப் பட்டுள்ளது.

தேர்வு ஆணையத்தி சர்வருக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  சம்மந்தப்பட்ட துறைகளுக்கும் போலீஸ் மற்றும் சைபர் குற்றப் பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய தேர்வு ஆணைய சர்வரின் செக்யூரிட்டி இவ்வளவு வீக்காவா இருக்கு?

A1TamilNews

From around the web