சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!

சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் அனைவரும் தற்போது மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பேரூரணி புதிய சிறையில் வசதிகள் இல்லை என்று காரணம் கூறப்பட்டிருந்தாலும், அதே சிறையில் இவர்களால் கைது செய்யப்பட்டவர்களும் இருப்பதால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதன் காரணமாகவே, அங்கிருந்து
 

சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசார் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம்!சாத்தான்குளம் ஜெயராஜ்- பென்னிக்ஸ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப் இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள்   முருகன், முத்துராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு பேரூரணியில் உள்ள தூத்துக்குடி மாவட்ட சிறையில்  அடைக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் அனைவரும் தற்போது மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். பேரூரணி புதிய சிறையில் வசதிகள் இல்லை என்று காரணம் கூறப்பட்டிருந்தாலும், அதே சிறையில் இவர்களால் கைது செய்யப்பட்டவர்களும் இருப்பதால், மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

அதன் காரணமாகவே, அங்கிருந்து தங்களை வேறு சிறைக்கு மாற்ற கோரிக்கை வைத்துள்ளார்கள். அருகே உள்ள பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், இவர்களால் கைது செய்யப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதால் மதுரை மத்திய சிறைக்கு மாற்றியுள்ளார்களாம்.

A1TamilNews.com

 

From around the web