வாழைத்தாருக்குள் சாராயம் கடத்த முடியுமா? பலே ஆசாமிகள் செய்த வேலையைப் பாருங்கள்!!

வாழைத்தார் போல் பார்சல் செய்து உள்ளே சாராயத்தைக் கடத்திய பலே ஆசாமிகளை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ள போதிலும், கள்ளச்சாராய சந்தையும் ஆங்காகங்கே கொடிகட்டிப் பறக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நூதனமான முறையில் சாராயத்தைக் கடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். வாழைத்தார்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது சுற்றிலும் சருகுகளால் மூடி, காய்களுக்கு அடிபடாமல் கொண்டு செல்வது வழக்கம். சருகுகளால் மூடியிருப்பதால், கொண்டு செல்லும் வழியிலேயே இயற்கையாகவே
 

வாழைத்தாருக்குள் சாராயம் கடத்த முடியுமா? பலே ஆசாமிகள் செய்த வேலையைப் பாருங்கள்!!வாழைத்தார் போல் பார்சல் செய்து உள்ளே சாராயத்தைக் கடத்திய பலே ஆசாமிகளை ஆந்திர மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.

நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளைத் திறந்துள்ள போதிலும், கள்ளச்சாராய சந்தையும் ஆங்காகங்கே கொடிகட்டிப் பறக்கிறது. ஆந்திர மாநிலத்தில் நூதனமான முறையில் சாராயத்தைக் கடத்தியவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

வாழைத்தார்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் போது சுற்றிலும் சருகுகளால் மூடி, காய்களுக்கு அடிபடாமல் கொண்டு செல்வது வழக்கம். சருகுகளால் மூடியிருப்பதால், கொண்டு செல்லும் வழியிலேயே இயற்கையாகவே வாழைக்காய்கள் பழுத்து விடுவதும் உண்டு.

இப்படி வாழைத்தார்களை கொண்டு செல்பவர்களை போலிசார் பிடிக்க மாட்டார்கள் என்று எண்ணிய பலே ஆசாமிகள், வாழைத்தாரின் அடிப்பக்கத்தில் உள்ள சீப்புகளை மட்டும் விட்டுவிட்டு, மற்ற காய்களை கத்தியால் வெட்டி எடுத்துள்ளனர். மீதமுள்ள அடியில் உள்ள சீப்புடன், நீளமான வளைந்த தண்டுடன், இரண்டு சாராயப் பைகளை சேர்த்து மூட்டையாகக் கட்டி, அதைச் சுற்றி வாழைச் சருகுகளால் பார்சல் செய்துள்ளனர்.

சாமர்த்தியமாகக் கொண்டு சென்ற சாராய வாழைத்தாரை போலிசார் மடக்கிப் பிடித்துள்ளனர்.

A1TamilNews.com

From around the web